உயிருடன் திரும்பி வந்தால் விஜய்யை சந்திப்பேன், இல்லை என்றால்...: ராணுவ வீரர் உருக்கம்
சென்னை: விஜய்யின் தீவிர ரசிகரான ராணுவ வீரர் தமிழ்ச்செல்வன் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். 2002ம் ஆண்டு முதல் ராணுவத்தில் உள்ளார். அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். தமிழ்ச்செல்வன் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுவதால் அவர் பணிக்கு கிளம்பிவிட்டார். மனைவி, குழந்தைகளிடம் கூட கூறாமல் கிளம்பிய அவர் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பாண்டியிடம் மட்டும் உண்மையை தெரிவித்துள்ளார்.
பாண்டி இது குறித்து விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் ஆனந்திடம் தெரிவிக்க அவர் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். உடனே விஜய் தமிழ்செல்வனுடன் செல்போனில் பேசியுள்ளார்.
நீங்க நல்லபடியாக போயிட்டு வெற்றியுடன் திரும்பி வருவீர்கள். நீங்கள் திரும்பி வந்த பிறகு நாம் சந்திக்கலாம் என்று விஜய் தமிழ்ச்செல்வனிடம் தெரிவித்துள்ளார். விஜய்யே தனக்கு போன் செய்து பேசிய மகிழ்ச்சியை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார் தமிழ்ச்செல்வன்.
நான் வெற்றியுடன் திரும்பினால் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். இல்லை என்றால் என் புகைப்படத்தை அவரிடம் காண்பித்து புகைப்படங்கள் எடுங்கள் என்று தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











