Leo Rohini Theater: இன்னொரு உயிர் போயிருக்கும்.. ரோகிணி தியேட்டர் பண்ண வேலை.. விஜய் ரசிகர் கதறல்!
சென்னை: லியோ படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது. லியோ டிரெய்லர் வெளியீட்டு விழாவை கூட ஆடியோ லான்ச் ரத்து செய்த நிலையிலும், லியோ படக்குழுவினர் நடத்தவில்லை.
இந்நிலையில், ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட சில திரையரங்குகள் லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு தியேட்டருக்குள் ரசிகர்களுக்காக டிரெய்லரை திரையிட்டனர்.

ரோகிணி தியேட்டரின் வெளியே டிரெய்லர் செலிபிரேஷனுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தியேட்டருக்குள் ரசிகர்களை உள்ளே விட்ட நிலையில், இருக்கைகளின் மேல் ஏறி ஆட்டம் போட்ட விஜய் ரசிகர்கள் அனைத்தையும் உடைத்து நாசமாக்கினர். இதில், ரசிகர்களின் உயிர் போகும் அபாயமும் இருந்ததாக இதற்கு முழு பொறுப்பை ரோகிணி தியேட்டர் நிர்வாகமே ஏற்க வேண்டும் என ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.
நொறுங்கிய நாற்காலிகள்: விஜய் ரசிகர்கள் கொண்டாடுவதற்காக டிரெய்லர் செலிபிரேஷன் பர்மிஷனுக்காக போராடி வந்த ரோகிணி தியேட்டர் ஓனர் ரேவந்த் சரண் அனுமதி கிடைக்காத நிலையில், தியேட்டருக்குள் லியோ டிரெய்லர் கொண்டாட்டத்தை நடத்த முடிவு செய்தார். ஆனால், கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளே நுழைந்த நிலையில், நாற்காலிகள் எல்லாம் நொறுங்கிப் போன அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ரோகிணி தியேட்டர் தான் காரணம்: ரசிகர்களின் ஆசையை தூண்டி விட்டு இத்தனை ஆயிரம் பேரை ஒன்று கூட வைத்து ஆட்டு மந்தையை திறந்து விட்டது போல ஒரே நேரத்தில் கதவை திறந்து விட ரசிகர்கள் வரிசையாக செல்லாமல் முண்டியடித்துக் கொண்டு ஓடி தியேட்டருக்குள் நுழைந்தது தான் இப்படியொரு சேதம் ஆக காரணம் என ரோகிணி தியேட்டரில் லியோ டிரெய்லரை பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் அளித்த பேட்டி தீயாக பரவி வருகிறது.
விஜய் பெயரை கெடுத்துட்டாங்க: ரசிகர்களை வரிசையாக உள்ளே அனுமதிக்க கூட முடியாத நிலையில், இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏன் ரோகிணி தியேட்டர் நடத்த வேண்டும் என்றும் இதனால் நடிகர் விஜய்க்கு தான் கெட்டப் பெயர் என அந்த ரசிகர் தனது குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
இன்னொரு உயிர் போயிருக்கும்: ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு தியேட்டரில் படத்தை போட்டு கொண்டாட்டம் பண்றோம் என சொல்லியதால் தான் ஒரு ரசிகன் பரிதாபமாக உயிரிழந்தான். நேற்று குவிந்த கூட்டத்தில் பலர் மிதிபட்டனர். யாராவது நசுங்கி செத்திருந்தால் இன்னொரு உயிர் போயிருக்கும் நிலை உருவாகி இருக்கும் என்று அந்த ரசிகர் இனிமேல் இதுபோன்ற கொண்டாட்டங்களை ரோகிணி தியேட்டர் நடத்த அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











