1000 ரூபாய் போட்டால் 2,000 ரூபாய்.. கடைசியா மொத்தமா பட்டை போட்ட விஜய் ரசிகர்.. சின்ன வயதிலேயே இப்படியா?

சென்னை: யூடியூப் சேனல்கள் ஆரம்பித்தும், ரீல்ஸ் போட்டும் பிரபலமானவர்கள் தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தான் உண்டு, தான் சம்பாதிக்கும் வேலை உண்டு என்று இருக்கிறார்கள். சிலர்தான் தங்களுக்கு இருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி அடுத்தவர்களிடம் ஃபிராடுத்தனத்தை செய்கிறார்கள். அந்தவகையில் விஜய் ரசிகரான சிறுவன் கொடுவை அன்பு என்பவர் ஏராளமானோரிடம் பண மோசடி செய்திருக்கிறார்.

டெக்னாலஜி அபரிமிதமாக வளர்ந்துவிட்ட காலத்தில் இப்போது இருக்கிறோம். கையில் ஸ்மார்ட் ஃபோன் இருந்தாலும், கொஞ்சம் திறமையும் இருந்தால் போதும்; யூடியூப் சேனலோ, இன்ஸ்டாகிராம் கணக்கோ ஆரம்பித்து அதில் வீடியோக்கள் போட்டு பிரபலமடையலாம் என்ற நிலைமை இருக்கிறது. அதனை பயன்படுத்தி பலரும் வயது, வித்தியாசம் இல்லாமல் ஃபேமஸ் ஆகிவருகிறார்கள். அப்படி ஒருவர்தான் கொடுவை அன்பு என்ற சிறுவன்.

Vijay Fan YouTuber Koduvai Anbu Accused of Cheating Followers in Work From Home Scam
Photo Credit:

ஃபேமிலிஸ்னு கொஞ்சிய சிறுவன்: அச்சிறுவனுக்கு அதிகபட்சம் 15 வயதுக்குள்தான் இருக்கும் என்று தெரிகிறது. தன்னை தீவிர விஜய் ரசிகராக காட்டிக்கொண்ட அவர்; விஜய் பற்றி பேசுவது, தவெக பற்றி பேசுவது என வாடிக்கையாக வீடியோக்களை போட்டார். சமீபத்தில் நடந்த ஜனநாயகன் ஆடியோ லான்ச்சுக்கு சென்றேன். என்னை வயது காரணமாக உள்ளே விடவில்லை என்று அழுதபடி் ஒரு வீடியோவை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அச்சிறுவனின் வீடியோவை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; கழுவி ஊற்றுபவர்களும் இருக்கிறார்கள். தனது ஃபாலோயர்ஸ்களை ஃபேமிலிஸ் என்றே விளிப்பார்.

தார் வாங்கிய சிறுவன்: கிட்டத்தட்டா 10 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கொண்டிருக்கும் அந்த சிறுவன் சமீபத்தில் யூடியூப் வீடியோக்கள் மூலம் சம்பாதித்த பணத்தை வைத்து தார் காரை வாங்கியதாக வீடியோ ஒன்று வெளியானது. சிறு வயதில் இவ்வளவு லட்சம் கொடுத்து கார் வாங்கி தனது தாய்க்கு பரிசாக கொடுக்கிறாரே என்று ஆச்சரியம்தான் எழுந்தது. ஆனால் போகப்போகத்தான் தெரிந்தது அது வீடியோக்கள் மூலம் பெற்ற பணம் இல்லை; பலரிடம் ஏமாற்றி பெற்ற பணம் என்பது.

எப்படி ஏமாற்றினார்: அதாவது அவர் தனது ஃபேமிலிஸிடம் (ஃபாலோயர்ஸ்), வீட்டிலிருந்தே பார்க்கும் வேலை இருக்கிறது. 1,000 ரூபாய் போட்டால் 2,000 ரூபாய் எடுக்கலாம், 10,000 போட்டால் 20,000 எடுக்கலாம் என கூறி பணத்தை வாங்கியிருக்கிறார். பணத்தை கொடுத்தவர்களுக்கு அவர் வேலையும் கொடுக்கவில்லை, அந்தப் பணத்தையும் கொடுக்கவில்லை. அவர்கள் அனுப்பும் மெசேஜுக்கோ, ஃபோனுக்கோ எந்த ரெஸ்பான்ஸும் செய்யாமல் இருந்திருக்கிறார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பலரும், இதுகுறித்து வீடியோ வெளியிட, 'கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை தந்துவிடுகிறேன் ஃபேமிலிஸ்' என கூறியிருக்கிறார்.

கதறும் நெட்டிசன்ஸ்: ஒரு சிறுவனால் ஏமாற்றப்பட்ட பலரும் கதறியபடி வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்த ஒருவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், 'கொடுவை அன்பு என்பவர் வொர்க் ஃப்ரம் ஹோம் என இன்ஸ்டாகிராமில் மெசேஜ் போட்டிருந்தார். என்னிடம் 13,000 ரூபாய்வரை வாங்கினார். அதற்கு பிறகு ஃபோன் செய்தாலும் மெசேஜ் செய்தாலும் ரிப்ளையே இல்லை. அந்தப் பையனை யாரும் நம்பாதீர்கள்' என தெரிவித்திருக்கிறார். இதேபோல் பலரும் வீடியோக்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அன்பு கொடுத்த விளக்கம்: இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து ஒரு வீடியோ வெளியிட்ட அன்பு, 'நான் ஸ்கேம் செய்துவிட்டதாக சொல்கிறீர்கள் ஃபேமிலிஸ். ஆனால் நான் உண்மையில் ஸ்கேம் செய்யவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பி தந்துவிடுகிறேன். நான் கார் வாங்கிய பொறாமையில்தான் அப்படி சொல்கிறார்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த விஷயம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சோஷியல் மீடியாவை பயன்படுத்தி வளர்வதெல்லாம் சரிதன். ஆனால் இவ்வளவு சின்ன வயதில் தனக்கு வந்த பிரபல்யத்தை பயன்படுத்தி இப்படி ஏமாற்றலாம் என்ற எண்ணம் ஒரு சிறுவனுக்குள் வந்திருப்பதை பார்த்து உண்மையில் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என்றும்; விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

More from Filmibeat

Read more about: vijay விஜய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X