Vijay: பீஸ்ட் படத்துல மொக்கை வாங்குன பாவத்துக்கு... விஜய்யை இப்படி பங்கம் செய்யலாமா நெல்சன்..?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இரண்டாவது பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

'Hukum Tiger Ka Hukum' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரஜினியின் ரசிகர்களுக்கு வெறித்தனமான வைப் கொடுத்துள்ளது.

முக்கியமாக இதில் சில வரிகள் நடிகர் விஜய்யை அட்டாக் செய்வதாக உள்ளது என சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதனால், இயக்குநர் நெல்சனை விஜய் ரசிகர்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Vijay: Fans allege that Nelson trolled Actor Vijay in Jailer second single

தளபதி விஜய் தாக்கப்பட்டாரா..? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் ரஜினி. அனிருத் இசையில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், யோகிபாபு உள்ளிட்டோர் ஜெயிலரில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் பாடலான 'காவாலா' சாங், தமன்னாவின் கிளாமர் டான்ஸால் செம்ம ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது சிங்கிளான 'Hukum Tiger Ka Hukum' பாடல் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. சூப்பர் ஸ்டாரின் இன்ட்ரோ பாடலாக உருவாகியுள்ள 'Hukum Tiger Ka Hukum' ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

அனிருத் இசையில், சூப்பர் சுப்பு என்பவர் எழுதியுள்ள இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் ரஜினியின் மாஸ் குறித்து ஃபயரிங் மோடில் உள்ளன. முக்கியமாக "பேரை தூக்க நாலு பேரு... பட்டத்தை பறிக்க நூறு பேரு" என்ற வார்த்தை ரஜினி ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது. ஆனால், அதேநேரம் இந்த வார்த்தைகள் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினியின் தரமான பஞ்ச் என அவரது ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர்.

அதாவது கடந்த சில மாதங்களாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து கோலிவுட்டில் புயலை கிளப்பியது. இதில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நடிகர் சரத்குமார் உட்பட சில தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக கூறியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கவே "பேரை தூக்க நாலு பேரு... பட்டத்தை பறிக்க நூறு பேரு" என்ற வார்த்தையை நெல்சனும் அனிருத்தும் வைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கியிருந்தார் நெல்சன். மோசமான மேக்கிங், மொக்கையான திரைக்கதை போன்றவற்றால் பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. ஒட்டுமொத்தமாக பீஸ்ட் திரைப்படம் சொதப்பியதற்கு நெல்சன் தான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல் விஜய் பெருந்தன்மையாக நடந்துகொண்டார்.

தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் நெல்சன் & கோ-வை ரவுண்டு அடித்த விஜய், தனது வீட்டிற்கு அழைத்து விருந்தும் கொடுத்தார். அப்படியிருக்கையில் ஜெயிலர் படத்தில் விஜய்யை அட்டாக் செய்து நெல்சன் பாடல் வரிகள் வைத்துள்ளது தளபதியின் ரசிகர்களை கடுப்பாகியுள்ளது. நெல்சனை நம்பி பீஸ்ட் படத்தில் நடித்ததற்காக மொக்கை வாங்கிய விஜய்யை, ஜெயிலரில் கலாய்த்தது எந்த விதத்தில் நியாயம் என கேட்டு வருகின்றனர்.

நெல்சனுடன் சேர்ந்துகொண்டு அனிருத்தும் இப்படி வேலை பார்த்துவிட்டாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால், இந்த ட்ரோல்கள் எதையும் கண்டுகொள்ளாமல் ஜெயிலர் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் இயக்குநர் நெல்சன். இதனால் ஜெயிலர் படம் ரிலீஸாகட்டும் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X