பிகில் படம் வருமோ வராதோ.. கைதிக்கு டிக்கெட்ட போட்டு வைப்போம்.. மனம் மாறும் விஜய் ரசிகர்கள்!
பிகில் படம் வருமோ வராதோ.. கைதிக்கு டிக்கெட்ட போட்டு வைப்போம்.. மனம் மாறும் விஜய் ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: பிகில் படம் ரிலீஸ் ஆகுமோ ஆகாதோ என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் ரசிகர்கள் சேஃபர் சைடாக கைதி திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் படம் பிகில். இந்தப் படம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையான 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படத்திற்கு உரிமை கோரியும் எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து சிக்கல்கள் உருவாகி வருகின்றன. படத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் நடைபெற்று வருகின்றன.

அரசியல் அதிகம்
பிகில் படம் 130 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதால், படத்திற்கு அதைவிட பல மடங்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய்- அட்லீ கூட்டணியில் வெளியான படம் அதிகம் அரசியல் பேசியதால் சர்ச்சைக்குள்ளானது.

கைதிக்கு ஆர்வம்
இதனால் இந்தப்படத்திலும் அதுபோன்ற சர்ச்சைகள் இருக்குமோ என திரையரங்க உரிமையாளர்கள் அஞ்சுகின்றனர். இதனால் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ட்ரீம் வாரியர்ஸின் கைதி படத்தை திரையிட திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

முன்னுரிமை
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி படத்திற்கும் சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ்தான் வழங்கியுள்ளது. கைதி படம் தொடர்பாக எந்த சர்ச்சையும் இல்லாத நிலையில் அந்த படத்தை வெளியிட திரையரங்குகள் முன்னுரிமை அளிப்பதாக தெரிகிறது.

விஜய் ரசிகர்களே
பிகில் படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், கைதி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்களே கார்த்தியின் கைதி படத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்துவருவதாகவும் வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











