சுசித்ராவால் சோஷியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை.. விஜய் vs தனுஷ் ரசிகர்கள் சண்டை எல்லை மீறுதே!

சென்னை: ஆர்ஜே மற்றும் பாடகியாக இருந்த சுசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் அளித்து வரும் பேட்டிகள் சோஷியல் மீடியாவில் பெரும் பிரளயத்தை உண்டாக்கி வருகிறது. சுச்சி லீக்ஸ் பிராங்க் போல சுசித்ரா தற்போதும் பிரபலங்களை வைத்து பிராங்க் செய்து வருகிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்ந்து பல சினிமா பிரபலங்கள் குறித்து அவதூறு கருத்துக்களை சுசித்ரா அடுக்கி வரும் நிலையில், அவரை ஸ்டாப் பண்ண சினிமா துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Vijay fans and Dhanush fans doing worst social media fight after Suchitra talks

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சுசித்ரா தனுஷ் குடும்பத்தை பற்றி தப்பாக பேசியதை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து சண்டையை ஆரம்பித்த நிலையில், தற்போது விஜய் மற்றும் திரிஷா குறித்து சுசித்ரா பேசியதை வைத்து தனுஷ் ரசிகர்கள் நடிகர் விஜய்யை கேவலப்படுத்தி வருகின்றனர்.

லிஸ்ட் பெருசா போகுதே: சினிமா நடிகர்களை தங்கள் ரோல் மாடல்களாகவே பல இளைஞர்கள் கருதி அவர்களை போலவே ஆக துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமா பிரபலங்களே பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்களை மிஞ்சும் அளவுக்கு போதை பார்ட்டி, பலருடன் உடலுறவு, ஓரினச்சேர்க்கை, ட்ரூத் ஆர் டேர் என எல்லை மீறி போவதாக சுசித்ரா புதுசு புதுசா உருட்டத் தொடங்கி உள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கார்த்திக் குமார் பற்றி பேசிய சுசித்ரா அடுத்து கமல்ஹாசன், விஜய், திரிஷா, வெங்கட் பிரபு, சிம்பு, யுவன் சங்கர் ராஜா, சங்கீதா, கிரிஷ், அனிருத் மற்றும் ஆண்ட்ரியா என ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் vs தனுஷ் ரசிகர்கள் சண்டை: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குடும்பம் பற்றி பாடகி சுசித்ரா பேசிய நிலையில், தனுஷ் மற்றும் கார்த்திக் குமார் இருவரும் தனி அறையில் என்ன பண்ணார்கள் என்றும் தனது கணவர் கார்த்திக் குமார் ஒரு 'கே' என்றும் சுசித்ரா பேசியதை வைத்து நடிகர் தனுஷை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். நடிகர் தனுஷ் குறித்து படுமோசமான பல்வேறு போஸ்டுகளை விஜய் ரசிகர்கள் தொடர்ந்து போட்டு வந்த நிலையில், கடுப்பான தனுஷ் ரசிகர்கள் தற்போது விஜய்யை பற்றி சுசித்ரா பேசியதை வைத்து நடிகர் விஜய்யை அசிங்கப்படுத்தும் விதமாக ட்விட்டர் சண்டையை ஆரம்பித்துள்ளனர்.

ஆதாரம் இல்லை: பாடகி சுசித்ரா நடிகர்கள் குறித்து மோசமாக பேசி வரும் நிலையில், அவரிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் இருந்திருந்தால் அவர் பேசுவதற்கு பதில் அதை வெளியிட்டு இருப்பார் என்றும் தனக்கு தோன்றியதை எல்லாம் என்ன மனநிலையில் சுசித்ரா பேசுகிறாரே என்று தெரியவில்லை. இதை வைத்துக் கொண்டு விஜய் ரசிகர்கள் மற்றும் தனுஷ் ரசிகர்கள் சண்டை போடுவது சம்பந்தப்பட்ட நடிகர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தான் ரொம்பவே பாதிக்கும் எனக் கூறுகின்றனர். தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சுசித்ரா தொடர்ந்து பேசி வருவதற்கு ஏதாவது ஒரு வலுவான உள்நோக்கம் இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X