விஜய்க்கு ஓட்டுப் போடமாட்டோம்.. கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்.. வேட்டையன் பஞ்சாயத்து டிரெண்டிங்
சென்னை: விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே நடக்கும் ரசிக சண்டை காரணமாக பாதிக்கப்படுவது என்னவோ அந்த இரு முன்னணி நடிகர்கள் தான். விஜய் படங்கள் வெளியாகும் போது ரஜினிகாந்த் ரசிகர்கள் ட்ரோல் செய்வதும் ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதும் விஜய் ரசிகர்கள் வன்மத்தை கொட்டுவதுமாக பஞ்சாயத்து ஆரம்பித்து தற்போது வேட்டையன் படத்தின் விமர்சனத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நடிகர் விஜய் சமீபத்தில் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்த போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம்பெற்று விரைவில் வரவேண்டும் என பிரார்த்தனை செய்தார்.

வேட்டையன் படம் ரிலீஸ் ஆனதுமே தேவி தியேட்டரில் படத்தை பார்த்துள்ளார். லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ரஜினிகாந்த் தனக்கும் விஜய்க்கும் பிரச்சனை என பேச வேண்டாம் என்றும் தங்களுடைய படங்களை கம்பேர் செய்ய வேண்டாம் என்றும் கூறினார். ஆனால், ரசிகர்கள் அவர்கள் இருவருக்குமே தலைவலியாக மாறி வருகின்றனர்.
விஜய்க்கு ஓட்டுப் போட மாட்டோம்: #தற்குறி_விஜய்_கழகம் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரஜினிகாந்த் ரசிகர்கள் வேட்டையன் படத்துக்கு விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்து விட்டார்கள். படத்தை டிசாஸ்டர் என சொல்லி விட்டார்கள். அதனால், விஜய்க்கு நாங்கள் ஓட்டு போட மாட்டோம். முடிந்த வரை மற்றவர்களையும் எங்கள் குடும்பத்தினரையும் ஓட்டுப் போட விடாமல் தடுப்போம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தேவையற்ற சண்டையை செய்து வருகின்றனர்.
மாநாட்டுக்கு மரண அடி: வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ள விஜய்யின் தவெக மாநாட்டுக்கு தலைவர் ரசிகர்கள் ஒன்றிணைந்து மரண அடி கொடுக்கப் போகிறோம். விஜய்யின் அரசியல் கனவை சூன்யமாக்கப் போகிறோம் என ரஜினிகாந்த் ரசிகர்கள் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.
எல்லை மீறிய விஜய் ரசிகர்கள்: தளபதி விஜய் ரசிகர்கள் அதை விட ரொம்பவே எல்லை மீறி #தற்கொலை_தீர்வல்ல_ரஜினி ஹாஷ்டேக்கை ட்விட்டரில் தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்த போதும் சில விஜய் ரசிகர்கள் தவறான ட்வீட்களை பதிவிட்டு பிரச்சனையை கிளப்பினர். அஜித் vs விஜய் சண்டையாக இருந்து வந்தது கடந்த சில ஆண்டுகளாக மீண்டும் ரஜினிகாந்த் படங்கள் ஓட ஆரம்பித்துள்ள நிலையில், விஜய் vs ரஜினிகாந்த் சண்டையாக மாறியுள்ளது.
யாருக்கு என்ன லாபம்?: சோஷியல் மீடியா சண்டையால் பாதிக்கப்படுவது இரு பெரும் நடிகர்கள் தான். ரசிகர்களின் சண்டையால் யாருக்கு என்ன லாபம் என்கிற கேள்விகள் தான் எழுகின்றன. நாட்டிலும் வீட்டிலும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் போது இப்படியொரு தேவையில்லாத சண்டை தேவை தானா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











