விஜய் பேச்சுக்காக வெறித்தனமாக வெயிட் பண்ணும் ரசிகர்கள்.. அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சென்னை: தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்தித்துப் பேசவுள்ளார். விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்வுகள் என்றாலே மக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கி விடுகிறது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான பின்னரும் விஜய் பேசுவதை காண மக்கள் கூட்டமாக வருவதும் அவரது வாகனத்தை அபாயகரமான முறையில் பின் தொடர்வதும் போன்ற சம்பவங்கள் நடந்துக் கொண்டு தான் வருகின்றன.

அதையெல்லாம் தனது ரசிகர்களும் தவெக தொண்டர்களும் பண்ண வேண்டாம் என்றும் முதலில் உங்க பாதுகாப்பு முக்கியம் என்றும் தேர்தல் முடிந்து வெற்றிப் பெற்றால் அனைத்து ஊர்களுக்கும் வருகிறேன் என்றும் விஜய் கூறியுள்ளார்.

Vijay fans and TVK Cadres waiting for TVK Leader speech at Tanjore Today

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க கடந்த ஒரு வாரமாக சங்கீதா விஜய்க்கு எதிராக தொடுத்த விவாகரத்து புகார் மனு கசிந்து பெரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கு விஜய் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மனைவிக்கு டார்ச்சர்: விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ள நிலையில், விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் அளித்த மனு எப்படி கசிந்தது? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதையும் மீறி அதில் திருமணத்தை மீறிய உறவில் ஒரு நடிகையுடன் விஜய் இருந்தார் என்றும் தனக்கு மனதளவில் அவர் கொடுத்த டார்ச்சர் குறித்தும் பேசிய நிலையில், மாதர் சங்கம் வரை விஜய்யை இதற்காக கண்டித்துள்ளது.

விஜய் என்ன சொல்லப்போகிறார்?: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் இன்று மதியம் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு கூட்டத்தில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் என்ன பேசப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விவாகரத்து சர்ச்சைக்குப் பிறகு பெண்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், அதை சரி செய்ய அந்த விவாகரத்தை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்று விஜய் நிச்சயம் பேசுவார் என்றும் அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பழியை சரி செய்ய முயல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்: இத்தனை நாள் தலைவர் ஸ்பீச் கேட்க ரொம்ப எதிர்பார்த்துட்டு இருப்பேன். ஆனா இந்த முறை நாளைக்கு தலைவர் ஸ்பீச் காக வெறித்தனமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஏன்னா கடந்த ஒரு வாரத்துல அவர சுத்தி எழுந்த சர்ச்சைகளும் பொய் பிரச்சாரங்களும் அவதூறுகளும் ஆபாசங்களுக்கு மிகப்பெரிய பதிலடி கொடுப்பார் நம்புறேன். Waiting for thalaivar Dharisanam" என விஜய் ரசிகரும் தொண்டருமான ராம்குமார் ட்வீட் போட்டுள்ளார். இவரை போலவே ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் விஜய்யின் இன்றைய தஞ்சாவூர் பேச்சுக்காக காத்திருக்கின்றனர். பெண்கள் கூட்டம் முன்பை போலவே இன்றும் கூடுமா? அல்லது குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X