துரந்தர் கார்.. 26 கூட்டணி கட்சி.. டைனோசர் பேரமா?.. இறங்கி அடிக்கும் விஜய் ரசிகர்கள்.. போச்சு!
சென்னை: தமிழ்நாட்டு முதலமைச்சராக விஜய் தொடர வேண்டுமென்றால் ஃப்ளோர் டெஸ்ட்டில் அதிக ஆதரவை பெற்று வெற்றிப் பெறவேண்டும். அதிலும், விஜய் கில்லியாக இன்று அதிக ஆதரவை பெற்று வெற்றிக் கண்டுள்ளார்.
விஜய்க்கு எதிராக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணியில் இருக்கும் தேமுதிக தலைவர் பிரேமலதா உள்ளிட்டோர் குதிரை பேரம் செய்தார் விஜய் என குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தில் சோபாவுக்குள் கட்டுக்கட்டாக பணத்தை வைத்துக் கொடுத்தது போல விஜய் கொடுத்து தனக்கான ஆதரவை திருமாவளவன் மற்றும் சி.வி. சண்முகத்திடம் பெற்றுவிட்டாரா என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
துரந்தர் கார்: இதுவரை முதல் நாள் முதல் காட்சி என விஜய் படங்களை பார்த்துக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் சமீப காலமாக டிவியில் லைவாக நடைபெறும் சட்டமன்ற விவாதங்களை பார்த்து சோஷியல் மீடியாவில் விஜய்க்கான சப்போர்ட்டை கொடுத்து வருகின்றனர். சினிமாவில் கூட இவ்வளவு த்ரில் இல்லை என்கின்றனர். விஜய்க்கு எதிராக பிரேமலதா பேசிய நிலையில், திமுக கூட்டணிக்கு நீங்க செல்ல கார் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட நிலையில், கேப்டன் குடும்பத்துக்கு கார் வாங்க கூட வக்கில்லையா என பேசினீர்களே துரந்தர் அக்கா என கலாய்த்து வருகின்றனர். திருமாவளவன் மற்றும் சி.வி. சண்முகம் சொந்தமாக சோபா கூட வாங்கக் கூடாதா? அவர்களுக்கு அதை விஜய் தான் வாங்கிக் கொடுத்தார் என்று நிரூபிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
டைனோசர் பேரம் பண்ணீங்களா?: தேர்தலுக்கு முன்பாக விஜய் எப்படியும் வந்து விடக் கூடாது என்பதற்காக 26 கட்சிகளுடன் கூட்டணி வைத்த போது நீங்க என்ன டைனோசர் பேரமா செஞ்சீங்க? திருமாவளவன் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்றோ அவரை கூட்டணியில் இருந்து விலக்குகிறோம் என்றோ உங்களால் சொலல் முடியுமா? அதிமுகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வந்ததாக அவரே கூறினாரே என விர்ச்சுவல் வாரியர்ஸ் ரவுண்டுக் கட்டி வருகின்றனர்.
மைனாரிட்டி அரசு: விஜய்யின் தவெக கட்சித் தொடங்கி 3 ஆண்டுகளில் சிறுபான்மை அரசாக பதவி ஏற்றதாக நீங்க சொன்னாலும் அது எனக்கு மகிழ்ச்சியே. பெரும்பான்மையை நூலிழையில் தவறவிட்டு விட்டோம். அடுத்த முறை பெரும்பான்மையை எந்தளவுக்கு பிடிக்கிறோம் பாருங்க என்கிற வகையில் முதலமைச்சர் விஜய் மாஸ் காட்டியுள்ளார் என்றும் தவெகவை விட திமுக அதிமுக இரண்டுக்குமே மக்கள் ஆதரவு கிடைக்கவில்லையே? என்றும் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. இளைஞர்கள் அரசியல் விவாதங்களை ஆரம்பித்துள்ள நிலையில், நாளை வெளியாகும் சூர்யாவின் கருப்பு படத்தையாவது தியேட்டருக்கு வந்து பார்ப்பார்களா? என சினிமா வட்டாரமே ஆழ்ந்த சிந்தனையில் உள்ளது.


Click it and Unblock the Notifications