ஏன் இப்படி பண்றீங்க?.. படத்தோட விளம்பரமே போச்சு.. பிகில் படக்குழு மீது ரசிகர்கள் அதிர்ச்சி!

பிகில் படத்தின் அப்டேட் எதுவும் புதிதாக வெளியாகாத காரணத்தால் விஜய் ரசிகர்கள் படக்குழு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

Recommended Video

Bigil movie Budget Revealed : பிகில் படத்தின் பட்ஜெட்-வீடியோ

சென்னை: பிகில் படத்தின் அப்டேட் எதுவும் புதிதாக வெளியாகாத காரணத்தால் விஜய் ரசிகர்கள் படக்குழு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வைரலாகி உள்ளது.

இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஒன்றாக திரையில் தோன்றும் பாத்திரங்கள் கண்டிப்பாக மாஸாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால்

ஆனால்

ஆனால் படம் வெளியாக இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கிறது. இதுவரை படத்தில் டிரைலர், டீசர் வெளியாகவில்லை. படத்தின் ஆடியோ பாடல்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இதுதான் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இன்னும் சில நாட்களே இருக்கிறது, இன்னும் ஏன் டீசரை வெளியிடாமல் இருக்கிறார்கள். குறைந்தது ஒரு மாதத்திற்கு முன் வெளியிட்டால்தான் படம் குறித்த பேச்சு இருக்கும்.

விளம்பரம்

விளம்பரம்

அப்போதுதான் எல்லா மக்களுக்கும் படம் வெளியாவது குறித்து தெரிய வரும். இதுதான் விளம்பரம். ஆனால் ஏன் பிகில் படத்திற்கு இப்படி செய்கிறார்கள். இது மோசம். படத்தின் விளம்பரம்தான் இதனால் பாதிக்கும் என்று விஜய் ரசிகர்கள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள்.

கடைசி

கடைசி

அதே சமயம் கடைசியாக வெளியான சர்க்கார் படத்திற்கும் இதேபோல்தான் 20 நாட்களுக்கு முன் டீசர் வெளியிட்டார்கள். அதனால் இந்த வாரம் டீசர் வெளியாகும். இப்படி வெளியிடுவதுதான் சரியானது என்றும் சில விஜய் ரசிகர்கள் டிவிட் செய்துள்ளனர்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இதுகுறித்து தற்போது பிகில் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், ரசிகர்களுக்கு பிடித்த வகையில் கமர்ஷியல் படம் ஒன்றை வெளியிட படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் படத்தின் டீசரும் மாஸாக இருக்க வேண்டும் என்று முயன்று வருகிறோம்.

நல்ல படம்

நல்ல படம்

அதனால்தான் டீஸர் தாமதம் ஆகிறது. ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். விரைவில் டீசர் அல்லது டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X