அண்ணா, நீங்க மட்டும் அப்படி செஞ்சீங்க விஜய் 62 பார்க்க மாட்டோம்: தளபதி ஃபேன்ஸ்
சென்னை: நீங்கள் மட்டும் அப்படி செய்தீர்கள் என்றால் விஜய் 62 படத்தை பார்க்க மாட்டோம் என்று விஜய்யிடம் அவரது ரசிகர்களே தெரிவித்துள்ளனர்.
மெர்சல் படத்தை அடுத்து விஜய் ஏ.ஆர். முருகதாஸுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நிச்சயம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறப்படுகிறது.

தங்கச்சி
விஜய் 62 படத்தில் தளபதிக்கு தங்கச்சியாக பிக் பாஸ் புகழ் ஜூலி நடிக்கப் போவதாக ஒரு செய்தி தீயாக பரவியுள்ளது. இதை கேட்ட தளபதி ரசிகர்கள் டென்ஷனாகியுள்ளனர்.

பாசம்
விஜய் படத்தில் தங்கை கதாபாத்திரம் என்றால் எப்பொழுதுமே ஸ்பெஷலாக இருக்கும். அந்த சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் ஜூலியை போய் நடிக்க வைப்பதா என்று தளபதி ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

சொல்லிட்டோம்
விஜய் அண்ணா தயவு செய்து ஜூலியை உங்கள் தங்கச்சியாக நடிக்க வைக்காதீர்கள். அப்படி மட்டும் செய்தீர்கள் என்றால் உங்கள் ரசிகர்களாகிய நாங்களே விஜய் 62 படத்தை பார்க்க மாட்டோம் என்று செல்ல மிரட்டல் விடுத்துள்ளனர்.

அப்படியா?
விஜய் 62 படத்தில் ஜூலி தளபதியின் தங்கையாக நடிக்கிறாரா என்று சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால் அவர்களோ அப்படியா என்று பதிலுக்கு கேட்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











