கோட் பாட்டு ஒரு பக்கம் டிரெண்டாகுது.. புஸ்ஸி ஆனந்த் வாயில என்னன்னு பாருங்க.. கப்பு கிடைக்குமா பிகிலு?
சென்னை: நடிகர் விஜய் தொடங்கிய அரசியல் கட்சி, இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இவரது கட்சிக்கு என்ன சின்னம் கேட்டு வாங்கப் போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. அந்த வகையில் இன்று அதாவது ஜனவரி 22ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பொது மக்களுக்கு ’விசில்’ விநியோகம் செய்து கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்து வருகிறார்.
அதேபோல் ரசிகர்கள் பலரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படமான கோட் படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான விசில் போடு பாடலை டிரெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிரபல விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் புஸ்ஸி ஆனந்த் விசில் விநியோகம் செய்யும் வீடியோவப் பகிர்ந்து, ’விசில் சப்ளை செய்ய ஆரம்பிச்சுட்டாப்டி புஸ்ஸி ஆனந்த்’ என்று பகிர்ந்துள்ளார். மேலும் சிலர் விஜய் மிகச் சரியாக காய்களை நகர்த்தி வருகிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதாவது, விஜய் நடித்த படம் பிகில். அவர் நடித்த கோட் படத்தில் விசில் போடு என்ற பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார். தற்போது தனது கட்சிக்கு விசில் சின்னத்தை கேட்டுப் பெற்றுள்ளார். இவை எல்லாம் விஜயின் முந்தைய திட்டம் போலத் தெரிகிறது. விஜய் தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தி வருகிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலர் போக்கிரி படத்தில் விஜய் அசினுக்கு விசில் அடிக்க சொல்லிக் கொடுக்கும் காட்சியையும், சிலர் லியோ படத்தில் விஜய் விசில் அடிக்கும் காட்சியையும் பகிர்ந்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











