'ரோஜா பூந்தோட்டம்..'சன் டிவியில் 'காதலுக்கு மரியாதை..' அதிரி புதிரியாக டிரெண்டாக்கிய விஜய் ஃபேன்ஸ்!

By

சென்னை: காதலுக்கு மரியாதை படம் சன் டிவியில் ஒளிபரப்பாவதை அடுத்து, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி உள்ளனர்.

Recommended Video

லாக்டவுன் நேரத்துல இதைத்தான் பண்ணுறாராமே, நம்ம விஜய் ஆண்டனி! - வீடியோ

விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம், காதலுக்கு மரியாதை. விஜய் ஜோடியாக ஷாலினி நடித்துள்ளார்.

இதில், ஶ்ரீவித்யா, சிவகுமார், சார்லி, தாமு, ராதாரவி, மணிவண்ணன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

குஞ்சாக்கோ போபன்

குஞ்சாக்கோ போபன்

இது மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அனியதிபிராவு' என்ற படத்தின் ரீமேக். இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபனும் ஷாலினியும் நடித்திருந்தனர். இதை பாசில் இயக்கி இருந்தார். மலையாளத்தில் இயக்கிய அவரே, தமிழிலும் இயக்கி இருந்தார். அனந்தகுட்டன் இசை அமைத்திருந்த இந்தப் படத்தை சங்கிலி முருகன் தயாரித்திருந்தார்.

பாடல்கள் செம ஹிட்

பாடல்கள் செம ஹிட்

இளையராஜா இசை அமைத்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. படத்தின் பாடல்களும் ஹிட்டாயின. இதன் பாடல்களுக்கு இப்போதும் வரவேற்பு இருக்கிறது. இந்தப் படம் சன் டிவியில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதையடுத்து விஜய் ரசிகர்கள், இந்தப் படத்தை சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

வழக்கமாக அஜித், விஜய் படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்குவது வழக்கம். இப்போது டிவிகளில் அவர்களது படங்கள் வெளியானாலும் டிரெண்டாக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு முன்பு பல படங்களை இதே போல, அவர்களது ரசிகர்கள் டிரெண்டாக்கி உள்ளனர்.

விஜய் ரசிகர்கள்

இப்போது, #KadhalukkuMariyadhai என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக்கில் படம் பற்றிய செய்தி மற்றும் தகவலை பகிருமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டதை அடுத்து, ஏராளமான விஜய் ரசிகர்கள் இந்த ஹேஷ்டேக்கில் தங்கள் நினைவுகளை பதிவு செய்துவருகின்றனர்.

வின்டேஜ் படம்

ஒரு விஜய் ரசிகர், படத்தின் டைட்டில் பாடல் சூப்பர், காதல் படம்னா இதுதான். தளபதி விஜய்யின் வின்டேஜ் படம் என்று தெரிவித்துள்ளார். இன்னொரு ரசிகர், முதன்முறையாக இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். இந்தப் படம்தான் என்னை விஜய்-யின் தீவிர ரசிகனாக மாற்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்

இன்னொரு ரசிகர், தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் காதல் படங்களில் முக்கியமானது காதலுக்கு மரியாதை. பல இளைஞர்களை, விஜய் ரசிகராக மாற்றிய படம் இது. இந்த படமும் இதன் பாடல்களும் மறக்க முடியாதவை என்று தெரிவித்துள்ளார். வெளியான காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் ரூப் செய்த படம் இது என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X