விஜய்யின் அடுத்த படம்..அந்த சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பாகம்தான்.. சிக்னல் கொடுத்த டெக்னீஷியன்!
சென்னை: பிரபல டெக்னீஷியன் வெளியிட்டுள்ள புகைப்படத்தை வைத்து விஜய், அடுத்து இந்தப் படத்தில்தான் நடிக்கப் போகிறார்கள் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
Recommended Video
'பிகில்'-ஐத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

குட்டி ஸ்டோரி
சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் செல ஹிட்டாகியுள்ளது. லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார்.

லாக்டவுன்
இந்தப் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில் லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் கொண்டாட்டமாக இருக்கும் என்றும் இது ஆக்ஷன் என்டர்டெயினர் படம்தான் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.

துப்பாக்கி 2
இந்தப் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் 'துப்பாக்கி'யின் அடுத்த பாகம் என்று கூறப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு வெளியான 'துப்பாக்கி'யில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார். சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால், அக்ஷரா கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர்.

சந்தோஷ் சிவன்
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகக் கதையில்தான் விஜய் நடிக்க போகிறார் என்ற செய்தி வெளியாகி வந்த நிலையில், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், துப்பாக்கி படத்தின் ஸ்டில்லை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

ஹேஷ்டேக்
இதனால் விஜய் ரசிகர்கள், 'இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் நடிக்கிறார் என்பதற்கான சிக்னல்' என்று நினைத்து #thuppakki2 என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். இதில், துப்பாக்கி தொடர்பான செய்திகளையும் புகைப்படங்களையும் விஜய் ரசிகர்கள், பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











