Don't Miss!
- Finance
பட்ஜெட்-க்கு முன் வரும் பொருளாதார ஆய்வறிக்கை.. இது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா..?
- Lifestyle
Shukra Gochar 2022: கும்பம் செல்லும் சுக்கிரனால் பிப்ரவரி 15 வரை இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது...
- News
புது வீடு கட்டி வீடியோ போட்ட யூடியூப் பிரபலம்..பார்த்துவிட்டு கொள்ளையடிக்க வந்த நபர்-கோவையில் திடுக்
- Sports
விராட் கோலிக்கு மீண்டும் ஒரு வீக்னஸ்.. தொடர்ச்சியாக ஒரே முறையில் அவுட்.. வசீம் ஜாஃபர் எச்சரிக்கை!
- Technology
ரூ.6,999க்கு அறிமுகமான ஸ்மார்ட்போன்! 124 மணிநேர பேட்டரி ஆயுள்.. இது எப்படி இருக்கு?
- Automobiles
அவ்வளவு காசு வைத்திருந்தும் மாடிஃபைடு கார்களை பயன்படுத்தும் இந்திய விஐபி-கள்!! இவ்வளவு பேர் இருக்காங்களா?
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்தெல்லாம் இருக்கட்டும்... தியேட்டர்ல துணிவு காத்து வாங்குதே கவனிச்சீங்களா?
சென்னை:
வலிமை
படத்தைத்
தொடர்ந்து
அஜித்
நடித்துள்ள
துணிவு
நேற்று
முன்தினம்
திரையரங்குகளில்
வெளியானது.
அஜித்தின்
துணிவு
படத்துடன்
விஜய்யின்
வாரிசும்
நேருக்கு
நேர்
மோதியது.
விஜய்
-
அஜித்
திரைப்படங்கள்
8
ஆண்டுகளுக்குப்
பிறகு
பொங்கல்
ரேஸில்
களமிறங்கியதால்
ரசிகர்களிடம்
அதிக
எதிர்பார்ப்பு
காணப்பட்டது.
இரண்டு
படங்களில்
எது
பாக்ஸ்
ஆபிஸில்
மாஸ்
என
ரசிகர்கள்
கம்பு
சுத்தி
வரும்
நிலையில்,
தரமான
வீடியோ
வெளியாகி
வைரலாகி
வருகிறது.
வலிமை
தோல்விக்கு
அப்டேட்
கொடுத்தது
தான்
காரணம்..
துணிவு
கதை
ட்ரெய்லரிலேயே
இருக்கு
-
ஹெச்.
வினோத்!

ட்ரெய்லர் வீவ்ஸ் சண்டை
அஜித் - விஜய் திரைப்படங்கள் தனித்தனியாக ரிலீஸானாலே ரசிகர்களின் சண்டை உக்கிரமாக இருக்கும். இதில் துணிவும் வாரிசும் ஒரேநாளில் ரிலீஸானது பெரிய யுத்தமாகவே மாறிவிட்டது. முன்னதாக துணிவு படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் 31ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் ஜனவரி 4ம் தேதி ரிலீஸானது. இந்த இரண்டு ட்ரெய்லர் எது அதிகமான பார்வைகளை கடந்தது என விஜய் - அஜித் ரசிகர்கள் கடுமையாக மோதிக் கொண்டனர். அஜித்தின் துணிவு ட்ரெய்லர் 61 மில்லியன் வீவ்ஸும், விஜய்யின் வாரிசு ட்ரெய்லர் 43 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் பஞ்சாயத்து
இதெல்லாம் ஓய்ந்த நிலையில், நேற்று முன்தினம் 11ம் தேதி அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் வெளியாகின. மூன்றாவது முறையாக கூட்டணி வைத்துள்ள அஜித் - ஹெச் வினோத், முதன்முறை இணைந்துள்ள விஜய் - வம்ஷி பைடிப்பள்ளி என இருதரப்பும் வெயிட்டாக களமிறங்கியது. இந்நிலையில், துணிவு, வாரிசு என இரு படங்களுக்கும் கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன. இதனால் இப்போது பாக்ஸ் ஆபிஸில் யார் மாஸ் என இருதரப்பு ரசிகர்களும் கம்பு சுத்தி வருகின்றனர்.

காத்து வாங்கிய தியேட்டர்
இதில் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 81கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் துண்வு 71 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். ஆனாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனிடையே நேற்று விஜய்யின் வாரிசு படம் பார்க்க ரசிகர்களே இல்லாத தியேட்டரின் வீடியோ வைரலாகி வந்தது. மொத்தமே பத்து பேர் தான் தியேட்டரின் உள்ளே இருப்பதாக தெரிந்தது. இப்போது அதேநிலை அஜித்தின் துணிவு படத்துக்கும் நேர்ந்துள்ளது.

விஜய் ரசிகர்கள் ட்ரோல்
கேஎஸ் என்ற தியேட்டரில் துணிவு திரைப்படம் ஓடுகிறது. ஆனால் அங்கே பல சீட்டுகள் காலியாக கிடக்கின்றன. கே எஸ் என்ற இந்த தியேட்டர் நாமக்கல்லில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தமே 10 பேர் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. ரிலீஸான இரண்டாவது நாளிலேயே துணிவு படத்துக்கு இந்த நிலையா என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விஜய் ரசிகர்களோ இந்த வீடியோவை ட்ரெண்டாக்கி அஜித் ரசிகர்களை காண்டாக்கி வருகின்றனர். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், விஜய்யின் வாரிசு படத்துக்கு ரசிகர்கள் வராததாலும், அந்த ஸ்க்ரீனில் தான் துணிவு திரையிடப்படப்படுவதாகவும் டிவிட்டரில் சண்டையிட்டு வருகின்றனர். இதில் எது உண்மை என தெரியாத போதும், இரண்டாவது நாளே முன்னணி நடிகர்களின் படங்களுக்கு வரவேற்பு இல்லாமல் போவது என்ன சோதனையோ என சினிமா ஆர்வலர்கள் கூறுகின்ற்னர்.
-
Bigg Boss Tamil 6: முதல் முறையா 3 நபர்களும் மேடையில்.. வீட்ல இருந்து எப்படி பறந்து வராங்க பாருங்க!
-
Bigg Boss Tamil 6: விக்ரமன், ஷிவின், அசீம் இந்த மூன்று பேரில் யாருக்கு சம்பளம் அதிகம் தெரியுமா?
-
பிக் பாஸ் 6 கிராண்ட் ஃபினாலே LIVE: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம்.. ரன்னர் அப் விக்ரமன்!