6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்னவா இருக்கும்? மரண வெய்ட்டிங்!
Recommended Video
சென்னை: பிகில் படம் தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு பிகில் படத்தின் அப்டேட் ஒன்று வருவதாக படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 21ஆம் தேதி வெளியானது. இதனை தொடர்ந்து படத்தின் 3 போஸ்டர்கள் வெளியாயின. இதன் மூலம் விஜய் பிகில் படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.
இந்தப்படத்தில் விஜய் ஃபுட் பால் கோச்சாகவும், நயன்தாரா ஃபுட்பால் பிளேயராகவும் நடிக்கின்றனர். பிகில் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது.
ஆச்சரியப்படும் அறிவிப்பு
இந்நிலையில் பிகில் படம் குறித்த முக்கிய தகவலை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது பிகில்' படத்தின் சிங்கிள் டிராக், டீசர், டிரைலர், இசை வெளியீடு தேதி , ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இல்லை என்றும், ரசிகர்கள் ஆச்சரியப்படும் ஒரு அறிவிப்பாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

காத்திருக்கும் ரசிகர்கள்
அர்ச்சானவின் இந்த டிவிட்டர் பதிவை தொடர்ந்து விஜய் ஃபேன்ஸ் அந்த அப்டேட் என்னவாக இருக்கும் என யோசிக்க தொடங்கிவிட்டனர். மேலும் எப்போது 6 மணியாகும் என்றும் ரசிகர்கள் ஒவ்வொரு மணி நேரமாக தள்ளி வருகின்றனர்.
ஷாருக்கான் தகவலா இருக்குமோ?
என்னவா இருக்கும் அப்டேட்..... படத்தில் ஷாருக்கான் இணைந்து இருக்கும் தகவலா இருக்குமோ.. காத்திருப்போம் மாலை 6 மணி.. என்று கூறுகிறார் இவர்.
சரியா என பார்க்கலாம்
பிகில் படத்தில் விஜய் அண்ணா ஒரு பாடல் பாடியிருக்கிறார்.. அதனால்தான் விவேக் அண்ணா டிவிட்டில் ட்ரம்ஸை மென்ஷன் செய்திருக்கிறார். என்னுடைய கணிப்பை சரியா என பார்க்கலாம்.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
எதிர்பாராததை கொடுங்கள்
பிகில் படத்துக்கான அப்டேட் வெயிட்டிங்.. எதிர்பாராத அப்டேட்களை கொடுங்கள்.. என கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
அதனாலதான் இப்படி
வேற வேற வேற வேற லெவல்ல அப்டேட் வருமுன்னு நினைக்கிறேன்.. இன்னைக்கு 6 மணிக்கு.. அர்ச்சு அக்கா தான் ஏதோ பெருசா எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள்ன்னு சொல்லுச்சு அதனாலதான் இப்படி.. என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஷாருக்கான் நடிக்கிறாரா?
பிகில் படத்தில் ஷாருக்கான் ஆக்ட் பண்றாராண்ணு கேட்டிருக்கிறார் இவர்.
எஸ்ஆர்கே ஆன் போர்டு
பெருசா நினைச்சுட்டு இருக்கோம்.. நீங்க சப்புன்னு எஸ்ஆர்கே ஆன் போர்டு போடப்போறீங்க.. நாங்க கடுப்பாக போறோம் இதான் நடக்கப்போகுது.. என்கிறார் இவர்.
டிவிட்டர் அலறும்..
இன்னைக்கு சாயுங்காலம் 6 மணிக்கு டிவிட்டர் அலறும்.. பேஸ்புக் கதறும்.. யூட்யூப் மலரும்.. என்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











