குட்டி ஸ்டோரியை கண்டுக்காத அட்லீ.. ட்விட்டரில் வளைத்த விஜய் ரசிகர்கள்.. குவியும் ட்ரோல்கள்!

Recommended Video

Thalapathy Vijay Viral Video | Master First Single | JalliKattu - Filmibeat Tamil

சென்னை: மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாட்டுக்கு ஏன் ப்ரோ ட்வீட் போடலை என இயக்குநர் அட்லீயிடம் விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குநர் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து, காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தளபதி விஜய் குரலில் நேற்று வெளியான மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் குறித்து அட்லீ, கருத்து தெரிவிக்காதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த படத்துக்கு மட்டும்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அறிவிப்பு காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. அந்த படத்தின் அப்டேட்டை பார்த்த இயக்குநர் அட்லீ, சூப்பர் செம்ம, தம்பி சமந்தா, டார்லிங் நயன்தாரா என ட்வீட் போட்டு இருந்தார்.

ஐடி ரெய்டு

அட்லீயின் அந்த ட்வீட்டுக்கு கீழே நெட்டிசன்கள் சிலர், அண்ணா அந்த ஐடி ரெய்டில் இருந்து எப்படி எஸ்கேப் ஆனீங்க, மாஸ்.. சூப்பர் என தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். பிகில் படத்தின் வசூல் தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் ஐடி ரெய்டு நடந்ததை இவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

கிங்யா நீ

விக்னேஷ் சிவனை டேக் பண்ணி, நயன்தாராவ டார்லிங்குன்னு சொல்ற பாத்தியா, கிங்யா நீ என இந்த நெட்டிசன் செம குசும்புத்தனமான மீமை போட்டு, இயக்குநர் அட்லீயை மரண கலாய் கலாய்த்துள்ளார். மேலும், அட்லீயின் ரசிகர்கள், விரைவில் ஷாருக்கானுடன் பண்ணப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் கொடுங்கண்ணா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

செல்ஃபி புள்ள

அந்த ட்வீட்டை தொடர்ந்து, காதலர் தினத்தை முன்னிட்டு, தனது காதல் மனைவி பிரியாவுடன் எடுத்த செல்ஃபி புள்ள ட்வீட்டை பதிவிட்டு, ஹேப்பி வேலன்டைன்ஸ் டே என இயக்குநர் அட்லீ ட்வீட் போட்டுள்ளார். காதலர் தினத்துக்கும் மேலாக, நேற்று மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் ரிலீசாகி வைரலான நிலையில், அதுகுறித்து எந்த பதிவையும் அட்லீ பதிவிடவில்லை.

ஒய் ப்ரோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான குட்டி ஸ்டோரி பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகி, பல மில்லியன் வியூக்களை தாண்டி வைரலாகி வருகிறது. ஆனால், விஜய் குரலில் வெளியாகியுள்ள அந்த பாடல் குறித்து ஒய் ப்ரோ, எந்தவொரு ட்வீட்டையும் போடலை என இந்த விஜய் ரசிகர் கேட்டுள்ளார்.

ஏன் எதுமே சொல்லல?

காதலர் தினத்துக்கு செல்ஃபி போடுறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஏன், ஒரு குட்டி கதை பாட்டை பத்தி எதுமே சொல்லல? என இந்த தளபதி ரசிகரும் தனது கேள்வியை எழுப்பியுள்ளார். விஜய் தனது ட்விட்டர் ஹேண்டிலில் கடைசியாக வெளியிட்ட மாஸ்டர் செல்ஃபி புகைப்படத்தை ஷேர் செய்த அட்லீ, குட்டி கதை பாடலுக்கு ட்வீட் போடாதது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்ஃபி ட்ரோல்

இயக்குநர் அட்லீ, தனது மனைவி பிரியாவின் சின்னை பிடித்து, சிரிக்கும் படி சொல்லி செல்ஃபி எடுப்பது போன்ற போஸ் கொடுத்துள்ளார். பிரியா அந்த புகைப்படத்தில், உம்முன்னு இருக்கிறார். காதலர் தினமான நேற்று அட்லீ வெளியிட்ட இந்த புகைப்படத்தை, வடிவேலுவின் காமெடி புகைப்படத்துடன் இணைத்து மரண ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X