வாக்களிக்க க்யூவில் நின்றேன்.. விஜய் ரசிகர்கள் செய்த சேட்டை.. ராதா ரவி ஓபன் டாக்.. அவரிடமே இப்படியா?

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய்; நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து களமிறங்கினார். இவர் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு காத்திருக்கிறது. இந்நிலையில் வாக்களிக்க நின்ற தன்னிடம் விஜய்யின் ரசிகர்கள் நடந்துகொண்ட விதத்தை பற்றி ராதா ரவி சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவர் கட்சியை தொடங்கிவிட்டார். அனைத்தும் நல்லபடியாக போவதாக அவர்கள் நிம்மதியாக இருந்த நிலையில்; விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவை தாக்கல் செய்து குண்டை தூக்கி போட்டார். அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த மனுவில் அவர் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் எல்லாம் விஜய்யின் இத்தனை வருட இமேஜை சுக்கு நூறாக உடைத்து நொறுக்கிவிட்டது என்பதுதான் உண்மை. பற்றாக்குறைக்கு திரிஷாவுடனும் கிசுகிசுக்கள் வலுக்க தொடங்கிவிட்டன.

Vijay Fans Behavior at Poll Booth Radha Ravi Shares Experience During Tamil Nadu Elections
Photo Credit:

தனியாக சந்தித்த விஜய்: இப்படி அரசியலுக்கு வந்த பிறகு ஏகப்பட்ட பிரச்னைகள் அவருக்கு உருவாகின. அதுவும் வாக்குப்பதிவு நடக்கவிருந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் திரைப்படமே லீக்காகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் திமுகதான் என்பது விஜய் மற்றும் அவரது ரசிகர்கள், தொண்டர்களின் நிலைப்பாடாக இருக்கிறது. தன்னை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் வந்தாலும்; யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டுவிட்டார். மே நான்காம் தேதி ரிசல்ட் வரவிருக்கிறது.

தொண்டர்கள் உற்சாகம்: விஜய் மொத்தம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார். தேர்தல் வாக்குப்பதிவு நாளின்போது விஜய்யின் ரசிகர்களும், தொண்டர்களும் ஆர்வத்துடன் பூத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். எப்படியாவது தங்கள் தளபதியை வெற்றி பெற செய்து கோட்டைக்குள் அனுப்பிட வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் தெரிந்தது. ஆனால் அதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்று அரசியல் வல்லுனர்கள் கூறினாலும்; தவெகவினரோ அமைச்சரவை பட்டியலை எல்லாம் வெளியிட்டுவிட்டார்கள்

ட்ரெஸ் கோடில் ரசிகர்கள்: அதேபோல் தேர்தல் நாளின்போது விஜய் மாதிரியே வெள்ளை சட்டையையும், காக்கி பேண்ட்டையும் அணிந்து வந்தார்கள் தொண்டர்கள். அதன் மூலம் தங்கள் ஆதரவு விஜய்க்கு என்பதை மற்ற வாக்காளர்களுக்கு உணர்த்தினார்கள். ஆனால் இது என்ன பள்ளி ஆண்டுவிழாவா இப்படி வந்திருக்கிறார்கள்; இதையெல்லாம் பார்ப்பதற்கே படு காமெடியாக இருக்கிறது என்று அனைவருமே சிரிக்கத்தான் செய்தார்கள். அதேசமயம் இப்படி ஒரு ட்ரெஸ் கோட் படையை இதுவரை தமிழ்நாடு அரசியல் பார்க்கவில்லை. இது அனைவருக்கும் ஒருவகையில் ஆச்சரியட்தையும் கொடுத்தது என்பதுதான் உண்மை.

ராதா ரவி பேட்டி: இந்நிலையில் தமிழ் சினிமாவின் சீனியர் நடிகரான ராதா ரவி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "தவெகவுக்கு கிடைத்த விசில் சின்னம் ரொம்ப ஈஸியான சின்னம். வாக்களிக்க நான் க்யூவில் நின்றுகொண்டிருந்தபோதே விசில் அடித்து காண்பிக்கிறார்கள். விசில் அடித்து ரவி அண்ணா என கூப்பிட்டார்கள். உடனே நானோ, டேய் அதெல்லாம் செய்யக்கூடாது டா. க்யூவில் நிற்கும்போது தவறு என கூறினேன். ஆனால் விஜய்யை பொறுத்தவரை ரொம்ப அமைதியான ஆள். பூகம்பமே வந்தாலும் அவர் நகரமாட்டார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X