Jailer: ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு தில்லு ஜாஸ்தி.. ஜெயிலர் வசூலை லியோ இத்தனை நாளில் முடிச்சிடுமாம்!

சென்னை: ஜெயிலர் திரைப்படம் 400 கோடியை கூட கடக்கவில்லை, அதற்குள் 500 கோடி என்றும் 575 கோடி என்றும் மனோபாலா விஜயபாலன் வடை சுடுகிறார் என ப்ளூ சட்டை மாறன் மற்றும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், அனைவருக்கும் ஆப்படிக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் 3வது வாரத்தில் தியேட்டரில் ஆளே வராமல் காலியாக இருப்பதாக ஹேட்டர்கள் ஒரு பக்கம் கதறிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை மேலும், கதற விட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ்.

Vijay fans believed Leo will beat Jailer 525 Crores Box Office in 8 days of release

இதுவரை ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூலை அள்ளியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் கொஞ்சமும் சளைக்காமல் கமெண்ட் பக்கத்தில் வந்து லியோ படம் 8 நாளில் ஜெயிலர் வசூலை முறியடித்து விடும் என சவால் விட்டு வருகின்றனர்.

525 கோடி வசூல்: ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த பொன்னியின் செல்வன், விக்ரம் படங்களின் வசூலை எல்லாம் வெளியான 15 நாட்களிலேயே வாரி சுருட்டி நம்பர் ஒன் இடத்தில் கெத்தாக அமர்ந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் 375 கோடி வசூலுக்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லையே என கம்பு சுத்திக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு வேட்டு வைக்கும் முடிவில் கலாநிதி மாறன் களத்தில் குதித்து 525 கோடிக்கும் அதிக வசூல் என அதிரடியாக அறிவித்து அலப்பறையை கிளப்பி உள்ளார்.

அக்டோபர் 19 வரைக்கும் தான்: ஆனால், அதற்கெல்லாம் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் கூட சளைக்காமல் அக்டோபர் 19 வரைக்கும் தான் இதெல்லாம். அப்புறம் இதெல்லாம் காணாமல் போயிடும். லியோவாக தளபதி விஜய் வருகிறார் என சன் பிக்சர்ஸ் ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை போட்டு சவால் விட்டு வருகின்றனர்.

8 நாள் போதும்: 15 நாளில் ஜெயிலர் படம் பண்ண வசூல் சாதனையை வெறும் 8 நாட்களிலேயே லியோ படம் முறியடித்து முதலிடத்தை பிடிக்கும் என படு தைரியமாக விஜய் ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.

73 வயதிலும் ராஜா தான் ரஜினி: 73 வயதிலும் இப்படி மக்களை தியேட்டருக்கு அழைத்து வந்து பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் படைப்பதெல்லாம் ரஜினிகாந்த்தால் மட்டுமே முடியும். இந்த தடவை விஜய்யின் லியோ ரொம்ப முக்கி வடை சுடணும் போல இருக்கு என ரஜினி ரசிகர்கள் அஃபிஷியல் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வைத்து அடித்து நொறுக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X