பீஸ்ட் படத்துக்கு சிறப்பு காட்சி இல்லையா.. கொந்தளித்த விஜய் ரசிகர்கள்.. கடலூரில் சாலை மறியல்!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள பீஸ்ட் படத்திற்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி ரத்து என பிரபல திரையரங்கம் அறிவித்த நிலையில், விஜய் ரசிகர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.
அதிகாலை 4 மணிக்கே பல திரையரங்குகள் ஸ்பெஷல் ஷோவிற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில், கடலூரில் உள்ள நியூ சினிமா திரையரங்கில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி இல்லை எனக் கூறியுள்ளார்களாம்.

பீஸ்ட் பிரச்சனை
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த வாரம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் உள்ளிட்ட ஏகப்பட்ட இடங்களில் இருந்து அந்த படத்துக்கு பிரச்சனைகள் கிளம்பி உள்ளன. இஸ்லாமிய அமைப்புகள் ஒரு பக்கம் எதிர்ப்பு குரல் கொடுக்க பால் முகவர்கள் இன்னொரு பக்கம் பிரச்சனையை கிளப்பி உள்ளனர்.

அமைதி காக்கும் விஜய்
பல பிரச்சனைகள் தனது படத்திற்கு சூழ்ந்துள்ள நிலையில், படம் சுமூகமான முறையில் ரிலிஸ் ஆக வேண்டும் என்பதற்காக பூவே உனக்காக மோடில் அமைதி காத்து வருகிறார் நடிகர் விஜய். மேலும், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக விஜய் மக்கள் இயக்கத்தினர் செயல்படக் கூடாது என்றும் ஆர்டர் போட்டுள்ளார்.

டிக்கெட் புக்கிங் ஸ்டார்ட்
சென்னை ரோகிணி திரையரங்கம் உள்ளிட்ட பல பிரபல திரையரங்குகளில் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட்டுகள் புக்கிங் ஆரம்பமாகி விட்டன. விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். சில திரையரங்குகளில் அதிகாலை காட்சியை தடை செய்ய வேண்டும் என்கிற முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரசிகர் மன்ற காட்சி
இந்நிலையில், அடுத்த தலைவலியாக கடலூர் நியூ சினிமா திரையரங்கில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் மன்ற காட்சி வழங்கப்படாததை கண்டித்து விஜய் ரசிகர்கள் கடலூர் புதுவை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் திடீரென நடத்திய சாலை மறியலால் பெரும் போக்குவரத்து நெரிசன் ஏற்பட்டது.
Recommended Video

விரட்டி அடித்து
கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஜய் ரசிகர்களை விரட்டி அடித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். கடலூரை தொடர்ந்து மேலும், பல மாவட்டங்களில் இதுபோன்ற ரசிகர் மன்ற காட்சிகள் ரத்து செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











