Just In
- 6 min ago
கடின உழைப்பின் பலன் படத்தில் தெரியும் அண்ணே.. பிகில் கதிர்!
- 12 min ago
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அசத்தலாய் பங்கேற்ற நடிகர் விஜய்.. யாருடையதுன்னு பாருங்க!
- 1 hr ago
ஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்!
- 1 hr ago
என் புருஷனுக்கும் ஜெயஸ்ரீக்கும் தான் தொடர்பு.. முதல் முறையாக வாய் திறந்த மகாலக்ஷ்மி!
Don't Miss!
- News
சென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா?
- Automobiles
தெறிக்க விடும் எம்ஜி ஹெக்டர்... டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மீண்டும் வீழ்ந்தன
- Finance
சத்தமில்லாமல் 7 நிறுவனத்திற்குத் தலைவரான சுந்தர் பிச்சை..!
- Lifestyle
இந்த ராசிக்காரர்களைத் தான் குரு பகவானுக்கு ரொம்ப பிடிக்குமாம்...
- Sports
இறுதி வரை விரட்டி விரட்டி அடித்த கோலி .. இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காதலுக்கு மரியாதை எல்லாம் மறந்து போச்சா விஜய் சார்.. மறுபடியும் ஒரு ஷாஜகானை எப்போ பார்ப்போம்?
சென்னை: காதலி ஆசைப்பட்டாங்கறதுக்காக தாஜ்மகாலை கட்டி வச்சாரு அந்த ஷாஜகான். தான் விரும்பிய பெண் ஆசைப்பட்டாங்கறதுக்காக, அவளோட காதலனுக்கே அவரை கட்டி வச்சார் இந்த ஷாஜகான்.
ஆமாங்க இன்னைக்கு விஜய்யின் ஷாஜகான் படம் ரிலீசாகி 18 ஆண்டுகள் நிறைவடைகிறது.
என்னது 18 வருஷம் ஆகிடுச்சா பிகில் படத்துலையும் விஜய் சின்ன பைய்யனா நடிச்சிருக்காரேன்னு வாய் பிழந்தா அது தான் அவரோட கரிஷ்மா.
ஆக்ஷன் படங்களில் அதிரடி காட்டி வரும் விஜய் மறுபடியும் காதலுக்கு மரியாதை கொடுத்து ஷாஜகான் போல ஒரு படம் பண்ணுவாரா? என்பது பில்லியன் டாலர் கேள்வியாகத்தான் இருக்கும்.
போடா எருமசானி கிறுக்க பயலே என்று ஹரிஜா சொன்னால் அது தான் இன்னைக்கு ட்ரெண்ட்
|
ஷாஜகான்
2001ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர். பி. செளத்ரி தயாரிப்பில் கே.எஸ். ரவி இயக்கத்தில் விஜய், ரிச்சா பல்லோட் நடிப்பில் வெளியான படம் ஷாஜகான். காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நாயகனுக்கு ஏற்படும் காதல் பிரச்சனையை யாராலும் தீர்த்து வைக்க முடியாமல் போகும் கதையை கச்சிதமாக இயக்கியிருப்பார் கே.எஸ். ரவி.

கே.எஸ். ரவி
1994ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் ஹானஸ்ட் ராஜ் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து மிஸ்டர் ரோமியோ, என் சுவாச காற்றே படங்களை இயக்கிய அவர், இறுதியாக 2001ம் ஆண்டில் விஜய்யின் ஷாஜகான் படத்தை இயக்கினார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அன்றைய காலக்கட்டத்தில் கொடுக்காததால், அதற்கு பின் படங்களை இயக்கவில்லை. 2010ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

சூப்பர் ஹிட் சாங்ஸ்
ஷாஜகான் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அன்றைய காலகட்டத்தில் இருந்து இன்று வரை அந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் மேஜிக்கை கொண்டுள்ளது. மணி சர்மாவின் இசையில் வெளியான மெல்லினமே மெல்லினமே, அச்சச்சோ புன்னகை, மின்னலை பிடித்து, சரக்கு வச்சிருக்கேன் என அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.
|
18 வருஷம்
காதலர் தினத்துக்கு வெளியாக வேண்டிய ஷாஜகான் திரைப்படம் குழந்தைகள் தினத்துக்கு வெளியானது வேடிக்கையான ஒன்று தான். ஆனாலும், தளபதி ரசிகர்கள் 18 ஆண்டுகள் கடந்தும் அந்த படத்தை சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.
|
கண்களில் கண்ணீர்
ஷாஜகான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை இன்று பார்த்தாலும் விஜய் ரசிகர்கள் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடும் அளவுக்கு எடுக்கப்பட்டிருக்கும். தனது காதலியை அவளுடைய காதலுனுக்கு மணம் முடித்து வைத்து நடிகர் விஜய் சிந்தும் கண்ணீர் காட்சியை ரசிகர்கள் தற்போது வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.