'சுறா'ன்னா சும்மா இல்லடா: கொண்டாடித் தீர்க்கும் விஜய் ரசிகர்கள் #9YearsofSura
சென்னை: சுறா படம் ரிலீஸாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை தளபதி ரசிகர்கள் நேற்றில் இருந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அஜித்தின் பிறந்தநாளை தல ரசிகர்கள் கொண்டாடி வரும் நேரத்தில் விஜய் ரசிகர்களும் கொண்டாட்ட மூடில் தான் உள்ளனர். என்ன கொண்டாட்டம் என்றால் சுறா ரிலீஸாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதை நேற்றில் இருந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அதை தான் #9YearsofSura என்ற ஹேஷ்டேக் போட்டு ட்விட்டரில் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சுறா
ராஜ்குமார் இயக்கத்தில் விஜய், தமன்னா உள்ளிட்டோர் நடித்த சுறா படம் ரிலீஸாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த படத்தில் விஜய் செம ஸ்டைலாக இருப்பார். அவர் ஸ்டைல் என்ன, பன்ச் பேசிய விதம் என்ன, நடிப்பு என்ன என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதை தான் விஜய் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தளபதிடா
சுறா படத்தில் விஜய்யின் டான்ஸ், ஆக்ஷன், பன்ச் வசனங்கள் தெறி என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். பின்ன சுறான்னா சும்மாவா!!!
#9yearsofSura
#Thalapathy
புகைப்படம்
அவர் நிற்கும் ஸ்டைலை பாருங்கய்யா. அடடடா அடடடா இது தான் ஸ்டைல்.
வெற்றி
சுறா ஓடவில்லை தான். ஆனால் வெற்றி, தோல்வி எல்லாம் சகஜமப்பா என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











