twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனையும் விக்ராந்த்!

    |

    சென்னை: பெரிய ஹிட் படங்களை கொடுக்கவில்லை என்றாலும், நல்ல நடிகர் என்ற பெயர் பெற்றுள்ள நடிகர் விக்ராந்தின் 35வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடப்படுகிறது.

    நடிகர் விஜய்யின் தம்பி முறை உறவு கொண்ட நடிகர் விக்ராந்த்க்கு தளபதி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

    அண்மையில் இவர் நடிப்பில் வெளியான பக்ரீத் படம் விமர்சகர்களிடையே நல்ல பாராட்டை பெற்ற படமாக அமைந்தது.

    14 ஆண்டுகள்

    ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற படத்தில் அறிமுகமானவர் நடிகர் விக்ராந்த். கிட்டதட்ட விக்ராந்த் நடிக்க வந்து 14 ஆண்டுகளில் வெறும் 17 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் நடித்த படங்கள் சரியாக போகவில்லை. 2010ம் ஆண்டு வெளியான கோரிப்பாளையம், 2011ம் ஆண்டு வெளியான முத்துக்கு முத்தாக படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    செகண்ட் ஹீரோ

    விக்ராந்த் படங்கள் பெரிய வெற்றியை அடையாத நிலையில், செகண்ட் ஹீரோவாகவும் ஹீரோவுக்கு நண்பனாகவும் நடிக்க ஆரம்பித்தார் நடிகர் விக்ராந்த். சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான பாண்டிய நாடு படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த விக்ராந்துக்கு தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த கவண் படத்திலும் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார் விக்ராந்த்.

    வில்லன்

    ஹீரோவாகவும், செகண்ட் ஹீரோவாகவும் நடித்து வந்த நடிகர் விக்ராந்த். முதன்முறையாக உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான கெத்து படத்தில் வில்லனாக நடித்திருந்தார். திருக்குமரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் சரியாக ஓடவில்லை என்பதால், விக்ராந்துக்கு அடுத்ததாக வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைக்காமல் போனது.

    பக்ரீத்

    பக்ரீத்

    விக்ராந்தின் வாழ்நாளில் இதுவரை அவர் நடித்த படங்களிலேயே மிகவும் சிறப்பான படமாக அமைந்தது பக்ரீத் படம் தான். ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் ஒரு ஒட்டகத்திடம் அன்பை காட்டும் ரத்தினமாக வாழ்ந்து தனக்கு நடிப்பு கை வந்த கலை என மீண்டும் நிரூபித்திருந்தார் விக்ராந்த். இந்த நல்ல நடிகனுக்கு நிச்சயம் வரும் ஆண்டு வெற்றியாண்டாக அமைய வாழ்த்துகள்.

    English summary
    Vikranth delivers the best performance of his career – he portrays the vulnerabilities of a naïve man who is denied compassion by people in an impressive way.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X