இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்னு போதும்.. லோகி யாருக்காகவும் எதையும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கல!#Master
சென்னை: விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர்.
விஜய் - விஜய் சேதுபதி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் விஜயின் 64வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இதன் மூலம் படத்தின் பெயர் மாஸ்டர் என தெரிய வந்துள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். #Master என்ற ஹேஷ்டேக் ட்ரென்டிங்கில் உள்ளது.

தனித்துவம்
படத்தின் டைட்டிலையும் விஜயின் கெட்டப்பபையும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்லேயே இயக்குநர் லோகேஷ் கனகராஜின் தனித்துவம் தெரிவதாகவும் புகழ்ந்து வருகின்றனர்.
இன்று மாஸ்டர்
தமிழ் சினிமாவில் மக்களால் என்றும் மறக்க முடியாத வாத்தியார்.. அன்று எம்ஜிஆர்.. இன்று இனி என்றும் விஜய் என்கிறார் இந்த ரசிகர்.
தரமா இருக்கும்
ஃபர்ஸ்ட் லுக்க பார்த்தாலே தெரியுது.. கண்டிப்பா படத்தோட கதை வெறித்தனமா, தரமா இருக்கும்..
அந்த விருது விழாவிலேயே லோகேஷ் புரோ தளபதி 64 படத்துக்கு விருது வாங்குவேன்னு சொன்னாரு.. கான்பிடென்ஸ் லெவல் என்கிறார் இந்த நெட்டிசன்.
சின்ன கேப்புல ஆப்பு
அந்தா காப்பு சுத்தி விட்டு பாக்குற சின்ன கேப்புல தான் வச்சு இருக்காறு மொத்த ஆப்பும் இந்த சம்மர் வெறித்தனம்.. தியேட்டர் ஓனர்ஸ் என்ஜாய்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
வேற லெவல்
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்னு போதும் லோகி யாருக்காகவும் எதையும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கலை அவரோட ஸ்டைல்ல தான் எடுக்குறார்ன்னு.. வேற லெவல் என்கிறார் இந்த நெட்டிசன்.
நான் ஹெட் மாஸ்டர்
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்.. என்ற விஜயின் டயலாக்கை கூறுகிறார் இந்த ரசிகர்.
கன்ட்ரோல்ல வச்சிகிட்டுருக்கு
தம்மாதுண்டு போஸ்டர் தான்டா இன்னைக்கு டுவிட்டரையே கன்ட்ரோல்ல வச்சிகிட்டு இருக்கு.. என்று கூறுகிறார்.
ரூல் பண்ண போறாரு
இந்த மாஸ்டர் தான் எல்லா க்ளாஸையும் ரூல் பண்ண போறாரு.. என்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications