ஒவ்வொரு ஃபிரேமும் வெறித்தனத்தின் உச்சம்யா.. கொல மாசு போ.. மாஸ்டர் டீசரை கொண்டாடும் விஜய் ஃபேன்ஸ்!
சென்னை: மாஸ்டர் படத்தின் டீசரை விஜய் ரசிகர்கள் வெறித்தனத்தின் உச்சம் என கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் இன்று மாலை வெளியானது.
மாஸ்டர் அப்டேட் ஆன் தி வே என மூன்று நாட்களுக்கு முன்பு பரவிய தகவலை வைத்தே விஜய் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

ஹேஷ்டேக்
இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகும் என நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை முன்னிட்டு #MasterTeaser என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் ட்ரென்ட்டானது.

மிரட்டல் டீசர்
தற்போது மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளுடன் மிரட்டலாக உள்ளது டீசர். இதனை பார்த்த ரசிகர்கள் விஜயையும் விஜய் சேதுபதியையும் ஒவ்வொரு ஃபிரேமிலும் ரசித்து வருகின்றனர்.

வேற லெவல்..
டீசர் ரிலீஸானதை தொடர்ந்து #Vaathi, #MasterTeaser, #Thalapathy, #Verithanam ஆகிய ஹேஷ்டேக்குகளையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். மாஸ்டர் டீசரும் மியூஸிக்கும வேறலெவலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெறிக்க விடுற சம்பவம்..
அடி நெருப்படி.. க்ளைமேக்ஸ்ல பவாணியும் வாத்தியும் மாறி மாறி எல்லார் மூஞ்சியையும் அடிச்சு உடைச்சு ரத்தம் தெறிக்க விடுற சம்பவம்.. என டீசரின் க்ளைமேக்ஸை புகழ்ந்துள்ளார் இந்த ரசிகர்.

வெறித்தனத்தின் உச்சம்யா..
ஒவ்வொரு ஃபிரேமும் வெறித்தனத்தின் உச்சம்யா.. முதல் நாள் முதல் ஷோ.. மெய் சிலிர்க்கும் ஃபீல்யா இப்பவே.. கொல மாசு போ.. ரொம்ப ரொம்ப நன்றி மாஸ்டர் டீம்..

சர வெடி..
மாஸ்டர் படத்தின் டீசரை பார்த்த இந்த நெட்டிசன், அண்ணா யாரு.. சர வெடி என பதிவிட்டுள்ளார்..

வாத்தி மீட்ஸ் பவானி..
வாத்தி மீட்ஸ் பவானி.. தியேட்டர் என்ன நிலைமை ஆகப்போகுதோ என இப்போதே கவலைப்பட்டுள்ளார் இந்த ரசிகர்.

ஸ்டிடைலிஷ் லுக்
மற்றொரு ரசிகரான இவர், மாஸ்டர் டீசர் ப்யூர் வெறித்தனம் தலைவா.. எப்போதும் இல்லாத ஸ்டைலிஷ் லுக்.. தளபதி ரசிகர்கள் எல்லாருமே 100 சதவீதம் திருப்தி.. லோகேஷ் கனகராஜூக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.. அனிருத் கலக்கிட்டீங்க என்று குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

டீசர்லேயே ஃபுல்பில்..
இதுவரை எந்த ஃபிளேவர்ல தளபதியை முழுசா பார்க்க ஆசைபட்டோமோ அதை டீசர்லயே ஃபுல்பில் பண்ணிட்டாப்ல மாஸ்டர் டீசர்.. படத்திற்காக காத்திருக்கிறோம்.. பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணுங்கனா என விஜயின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார் இந்த ரசிகர்.

ஏதாச்சும் பேசியிருக்கலாம்
டீசரை பார்த்த இந்த ரசிகர், தளபதி டயலாக் சொல்லுவாருன்னு எதிர்பார்த்தேன்.. ஏதாச்சும் பேசியிருக்கலாம் ஒரு வார்தைனாலும்.. என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











