எப்பா.. என்னையா இப்படி ஒரு போஸ்டர் விட்ருக்கீங்க.. தரம்.. கொண்டாடும் ஃபேன்ஸ்.. தெறிக்கும் டிவிட்டர்!

Recommended Video

விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

சென்னை: மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் அதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சண்டை காட்சி

சண்டை காட்சி

இதுவரை வெளியான இரண்டு போஸ்டர்களில் விஜய் மட்டும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இன்று வெளியான மூன்றாவது லுக் போஸ்டரில் படத்தின் ஹீரோவும் வில்லனும் இடம்பெற்றுள்ளனர். அதாவது நடிகர் விஜயும் விஜய் சேதுபதியும் போஸ்டரில் உள்ளனர். அதில் இருவரும் சட்டையில்லாமல் சண்டை போடுவது போன்று உள்ளது மூன்றாவது லுக் போஸ்டர்.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

மூன்றாவது லுக் போஸ்டரை விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். #MasterThirdLook என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் ட்ரென்டிங்கில் உள்ளது. இதேபோல் #ThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் உள்ளது.

ட்ரென்டிங்கில் டாப்

ட்ரென்டிங்கில் டாப்

இதனிடையே மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து வித விதமான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. #MasterThirdLook, #verithanam, #MakkalSelvan, #Thalapathy64, #ThalapathyVijay ஆகிய ஹேஷ்டேக்குகள் சென்னை அளவில் ட்ரென்டிங்கில் உள்ளன.

தரம்

மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டரை பார்த்த இந்த ரசிகர், எப்பா.. என்னையா இப்படி ஒரு போஸ்டர் விட்ருக்கீங்க.. தரம் என்று கூறியிருக்கிறார். இதோபோல் மற்றொரு ரசிகர், தளபதி மற்றும் மக்கள் செல்வன்.. இது வேற லெவல் வெறித்தனம்.. என மாஸ்டர் படத்தின் போஸ்டரை புகழ்ந்துள்ளார்.

வெறி ஏறுது

மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் பட்டய கிளப்புது. தளபதியை பார்த்தாலே வெறி ஏறுது.. என்றும் தளபதி வெறியன் போடுறா வெடிய என்று கூறியிருக்கிறார் இந்த ரசிகர். தலைவா இதை விட வெறித்தமான லுக் காமிக்கிறவனுக்கு லைப் டைம் செட்டில்மென்ட் டா என்று கூறுகிறார் நடிகர் விஜயின் இந்த ரசிகர்.

சாதனை பண்ணும்

சாரே கொலை மாஸ் என இயக்குநர் லோகேஷ் கனகராஜை புகழ்ந்துள்ளார் இந்த ரசிகர். மேலும் நம்ம டேக் இப்ப உலக அளவில் 2-ஆவது இடத்தில் ட்ரென்ட் ஆகுது. கண்டிப்பா பிகில் மாதிரி இந்த படமும் 350 கோடி வசூல் அப்படின்ற சாதனைய பண்ணும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் இந்த ரசிகர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X