தேர்தலுக்கு முன் ஜன நாயகன் வந்திருந்தா 200 சீட் கன்ஃபார்ம்.. தியேட்டரில் படத்தை கொண்டாடும் ரசிகைகள்!

சென்னை: லியோ படம் முதன் முறையாக 148 கோடி வசூலை ஈட்டி முதல் நாளில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை உலகளவில் ஈட்டிய தமிழ் படமாக மாறியது. விஜய் நடித்த கோட் திரைப்படமும் 128 கோடி வரை முதல் நாளில் வசூல் ஈட்டியது.

ஜன நாயகன் திரைப்படம் லீக்கான நிலையில், 50 கோடி கூட வசூல் செய்யாது என பேசப்பட்ட நிலையில், அதிகபட்சமாக உலகளவில் 78 கோடி ரூபாய் வரை முதல் நாளில் வசூல் ஈட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Vijay fans celebrating Jana Nayagan and says if it come before election he will get majority

2வது நாளான இன்று ஜன நாயகன் திரைப்படம் 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 9ம் தேதியோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ இந்த படம் வெளியாகி இருந்தால் விஜய் 200 சீட்களை வென்று பெரும்பான்மையுடன் முதலமைச்சராக ஆகியிருப்பார் என அவரது பெண் ரசிகைகள் படத்தை பார்த்து விட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தணிக்கை சான்றிதழ் பஞ்சாயத்து: இதுவரை விஜய் படத்துக்கு வராத பிரச்னையாக இந்த முறை தணிக்கை சான்று கிடைக்காமல் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகாமல் போனது. பவர்ஃபுல்லான கதையை கொண்ட பராசக்தி படத்துக்கு கடைசி நேரத்தில் சில கத்தரிகளுடன் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு ஜனவரி 10ம் தேதி படம் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. உச்சநீதிமன்றம் வரை ஃபைட் செய்தும் படத்துக்கு சென்சார் கிடைக்கவில்லை. அதன் பின்னர் வழக்கை வாபஸ் செய்த பிறகும் ஜன நாயகன் வெளியாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகும் கூட சென்சார் வழங்கப்படவில்லை. கடைசியாக ஜூலை 9ம் தேதி சென்சார் வழங்கப்பட்டு ஜூலை 23ம் தேதியான நேற்று படம் வெளியானது.

முதலமைச்சரான விஜய்: பராசக்தி படத்தை திமுக பிரச்சார படமாக கையில் எடுத்து ரிலீஸ் செய்தும் அந்த படமும் வெற்றிப்பெறவில்லை, திமுகவும் தேர்தலில் பெரும்பான்மையை பெற முடியவில்லை. ஆனால், விஜய்யின் ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகாத நிலையிலும், மக்கள் அவரை நம்பி ஓட்டுப் போட்ட நிலையில், 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான மேஜிக் நம்பர் 118 வருவதற்காக திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் நாடி முதலமைச்சராக மாறினார்.

200 இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும்: ஜன நாயகன் படத்தில் பெண்கள் வீரத்துடன் இருக்க வேண்டும் என்கிற பகவந்த் கேசரி கதையை தாண்டி மக்கள் நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பல வருட பெரிய கட்சிகளை பார்த்து பயந்து நடுங்கக் கூடாது என்கிற அரசியல் கருத்துக்களையும் வைத்ததை பார்த்த ரசிகைகள் இந்த படம் தேர்தலுக்கு முன்பாக வெளியாகி இருந்தால் 200 இடங்களில் தவெக வெற்றிப் பெற்று விஜய் பெரும்பான்மையுடன் முதலமைச்சராக ஆகியிருப்பார் என்றும் பாவிங்க அதை தடுக்கத்தான் படத்தை இவ்ளோ லேட் பண்ணாங்க என்றும் பேசி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X