ஜெயலலிதாவுக்கு தண்டனை... இனிப்பு வழங்கிக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்!

By Shankar

சென்னை: சொதத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகத் தீர்ப்பு வெளியானதும், விஜய்யின் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகிவிட்டார்கள்.

இந்தத் தீர்ப்பை அவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினார்கள்.

Vijay fans celerates Jaya's sentence

2011-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டவர் விஜய். ஆனால் விஜய்யின் முதல்வர் ஆசையைப் புரிந்து கொண்ட, ஜெயலலிதா உடனடியாக அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமான நடவடிக்கைகளில் இறங்கினார்.

கடந்த இரு ஆண்டுகளாக விஜய்யால் தன் பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாட முடியவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்வரை அரசியல் பேச முடியாமல் தவிர்த்து வந்தார் விஜய். தலைவா படப் பிரச்சினையில் அவர் இதுவரை சந்திக்காத அவமானத்தைச் சந்தித்தார்.

இந்த சூழலில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் கத்தி படத்தை வெளியிடும் சூழலை ஜெயலலிதா அரசு உருவாக்கித் தருமா என்ற சந்தேகம் நிலவி வந்தது.

இந்த நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்து, அவர் சிறைக்கும் போகிறார்.

இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலையைக் கொடுத்திருக்கிறது. பலரும் தங்கள் மேலிடத்துக்கு போன் போட்டு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X