TVK என முழக்கமிட்ட ரசிகர்கள்.. விஜய் கண்முன்னே கைது செய்யப்பட்ட ரசிகர்!
சென்னை: ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தவெக கொடி, டீசர்ட், பதாகை ஆகியவற்றை கொண்டு வரக் கூடாது என மலேசியா காவல்துறை ஏற்கனவே எச்சரித்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் மொத்தமாக சேர்ந்து கொண்டு TVK, TVK என முழக்கமிட்டு அரங்கையே அதிர வைத்தனர்.
எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன், வரும் 9ந் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமிதா, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு பிறகு விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவின் தலைநகர் கோலம்பூரில் புக்கிட் ஜலீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

முழக்கமிட்ட ரசிகர்: இதில், மேடையில் விஜய் எண்ட்ரி ஆனபோது உற்சாக மிகுதியில் ஒரு ரசிகர் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை எடுத்து காட்டியதால் அவரை கைது மலேசிய காவல்துறையினர் கைது செய்தனர். இசை வெளியீட்டு விழாவில் தவெக தொடர்பான கொடி, டீ ஷர்ட், பதாகை ஆகியவற்றை கொண்டுவரக்கூடாது. அரசியல் குறியீடு கொண்ட எந்த பொருளும் உபயோகப்படுத்தக்கூடாது என்று ஏற்கனவே மலேசிய காவல் துறை அறிவித்து இருக்கும் நிலையில் ஒரு ரசிகர் தடைகளைமீறி, அரங்கத்திற்குள் கொடியை கொண்டு வந்து காட்டியதால் அவர் கைது செய்யப்பட்டார். இதனால், அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முழக்கமிட்ட ரசிகர்: அதே போல, ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து கொண்டு TVK... TVK என முழக்கமிட்டனர். இதைப்பார்த்த விஜய் அது இதற்கான மேடை இல்லை, இங்கு இதை சொல்லக்கூடாது என்று தனது ரசிகர்களுக்கு விஜய் செய்கையால் அன்பு வேண்டுகோள் விடுத்ததார். ஆனால், ரசிகர்கள் கொடிக்கு தான் அனுமதி இல்லை, முழுக்கமிடலாம் என தொடர்ந்து முழக்கமிட்டனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல ஊர்களில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பே மலேசியாவிற்கு வந்துள்ளனர். மேலும் இன்றைய இசை வெளியீட்டு விழாவில் சுமார் 80 ஆயிரம் பேர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் டிக்கெட் எடுத்துக்கொண்டு கலந்து கொண்டவர்கள் தான்.


Click it and Unblock the Notifications











