Chief minister of India.. டாரன் வாட்கின்ஸையே டென்ஷனாக்கிய தளபதி ரசிகர்கள்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: ஸ்பீட் என அழைக்கப்படும் பிரபல அமெரிக்க யூடியூபர் காரில் செல்லும் போது தளபதி விஜய் ரசிகர்கள் பைக்கில் சேஸ் செய்துக் கொண்டு சென்று TVK என்றும் தளபதி என கத்திய வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

அதிலும், அவர்கள் Chief minister of India என சொன்னது தான் முரட்டு ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீட்யோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ப்ளூ சட்டை மாறனும் தனது பங்குக்கு கலாய்த்துள்ளார்.

Vijay fans chased Speed aka Darren Watkins Jr video roasted by Blue Sattai Maran

தவெகவினர் கரூரில் பண்ண சம்பவமே ஒட்டுமொத்த இந்தியாவாலே மறக்க முடியாத சம்பவமாக மாறிய நிலையில், சர்வதேச அளவில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளனர் என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

அடங்காத ரசிகர்கள் கூட்டம்: தீபாவளி கொண்டாட்டத்தை தவெகவினர் தவிர்க்க வேண்டும் என விஜய் வேண்டுகோள் விடுத்த நிலையில், பலரும் அதை மதிக்கவில்லை என்றும் அனைத்து மாவட்டங்களிலும் கரூர் துயரத்தை மறந்து தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்ரோல்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் கரூர் சம்பவத்துக்குப் பிறகு இன்னமும் அடங்காமல் இப்படி அலப்பறை செய்து வருகிறார்களே என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Chief minister of India: வருங்கால Chief minister of Tamil Nadu என்று கூட சொல்லாமல் Chief minister of India என ஸ்பீட் என்னடா சொல்றீங்க புரியல எனக் கேட்டதற்கு தளபதி ரசிகர்கள் கூறியது தான் ஹைலைட் என பலரும் பயங்கரமாக ரோஸ்ட் செய்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: "Famous American Youtuber Darren Watkins Jr got confused by the noise created by the Vijay fans in Thailand. Vijay fans: தளபதி...Chief minister of India.
Watkins: What is தலைவலி?
------------
அலப்பறைக்கு ஒரு அளவு இல்லையாடா?" என ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். அரசியல் தலைவராக மாறியுள்ள விஜய்க்கு அரணாக அவரது ரசிகர்கள் இருக்க வேண்டும் என்றும் ட்ரோல் மெட்டீரியலாக மாறக் கூடாது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X