பீஸ்ட் டீசரா... ட்ரெயிலரா... எதனா சீக்கிரம் கொடுங்கப்பா... தொடர்ந்து கோரிக்கையில் ரசிகர்கள்

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் அல்லது டீசர் எதையாவது வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தளபதி விஜய்

தளபதி விஜய்

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் பூஜா ஹெக்டே. படம் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக உள்ளது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் வெளிநாட்டு மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியீட்டு உரிமைகள் பெரிய தொகைக்கு விற்றுத் தீர்ந்துள்ளது. நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த படத்தை பிரம்மாண்டமாக வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறது.

மற்ற மொழிகளில் பிரமோஷன்

மற்ற மொழிகளில் பிரமோஷன்

மற்ற மொழிகளிலும் படத்தின் பிரமோஷனை சிறப்பாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரமோஷன்களில் விஜய் கலந்து கொள்வாரா என்பது குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ஏராளமான மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது.

உற்சாகமான விஜய்

உற்சாகமான விஜய்

இதுவரை இல்லாத வகையில் இந்தப் பாடல்களில் மிகவும் உற்சாகமான விஜய்யை பார்க்க முடிகிறது. நடனம் என்றாலே பட்டையை கிளப்புவார் விஜய். இந்தப் பாடல்களில் அவரின் உற்சாகம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அவருக்கு இணையாக பூஜா ஹெக்டேவும் ஆட்டத்தில் பட்டையை கிளப்பியுள்ளார்.

ரசிகர்கள் தொடர் கோரிக்கை

ரசிகர்கள் தொடர் கோரிக்கை

படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இந்தப் பாடல்களை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் ட்ரெயிலர் அல்லது டீசரை வெளியிட தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் வைத்துள்ளனர்.

மாலை அறிவிப்பு?

மாலை அறிவிப்பு?

இதனிடையே படம் குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில், ரசிகர்களை டீசர் அல்லது ட்ரெயிலருக்காக சன் பிக்சர்ஸ் காத்திருக்க செய்து வருவது அவர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X