நண்பர் அஜித் மாதிரி கோட் சூட்டில் விஜய்.. ஒலிக்கும் பாடல்கள்.. அதிரும் மைதானம்.. ரசிகர்கள் செம வைப்
சென்னை: விஜய் நடித்திருக்கு ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தளபதி திருவிழா என்கிற பெயரில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்துவருகிறது. ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இதுவரை 60,000 பேருக்கும் மேல் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைதானத்தில் விஜய் பட பாடல்களை பின்னணி பாடகர்களும், பாடகிகளும் பாட ரசிகர்கள் உச்சக்கட்ட வைப் செய்துவருகிறார்கள்.
ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு அடுத்த நாள் சிவகார்த்திகேயனின் பராசக்தி ரிலீஸாகவிருக்கிறது. போட்டிக்கு எஸ்கே வந்தாலும்; இது விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை பராசக்தியைவிடவும் அதிகம் பெற்றிருக்கிறது ஜனநாயகன். இது பகவந்த் கேசரியின் ரீமேக்காக வருமா இல்லை வினோத்தின் சொந்த கதையாக வருமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இசை வெளியீட்டு விழா: இதற்கிடையே அரசியல் கட்சி ஆரம்பித்து ஆளும் தரப்பை கடுமையாக விஜய் அட்டாக் செய்வதால்; தமிழ்நாட்டில் இசை வெளியீட்டு விழாவை நடத்தாமல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதனையொட்டி அந்த நாட்டை சேர்ந்த டத்தோ மாலிக் என்பவரிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தது பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன்.

களைகட்டும் விழா: இதுதான் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதில்; வரலாற்றில் இடம்பிடிக்கும்படி நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்தார். ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய மைதானத்தை பிடித்ததிலிருந்து; விஜய்யும், பிரபலங்களும், ரசிகர்களும் அங்கே தரையிறங்கி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதுவரை அத்தனையையும் பக்காவாக செய்துவிட்டார். இதனால் படக்குழு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.
செம ஐடியா: முக்கியமாக இன்று மலேசியாவில் 100 சதவீதம் மழை கணிக்கப்பட்டிருந்தது. ஸ்டேடியமும் ஓபன் ஸ்டேடியம் என்பதால் ரசிகர்கள் அனைவருக்கும் உடனடியாக ரெயின் கோட் வழங்கப்பட்டது. இதை பார்த்த பலரும் அட இது செம ஐடியா. எந்த இடரும் நிகழ்ச்சிக்கு வராமல் பார்த்துக்கொள்கிறார்கள் என நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பவர்கள் சோஷியல் மீடியாவில் பூரித்து போய் பதிவிட்டுவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைபில் ரசிகர்கள்: முதலில் தொடங்கிய தளபதி திருவிழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி சரண் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற மேகமாய் வந்து போகிறேன் பாடலை பாடினார். அது அனைவரையும் பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது. அவரைத் தொடர்ந்து பாடகி அனுராதா ஸ்ரீராமும், பாடகர் ஹரி சரணும் குஷி படத்தில் இடம்பெற்ற ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் பாடலை பாட ரசிகர்கள் துள்ளி குதித்தார்கள். அனைத்துக்கும் உச்சமாக மெர்சல் படத்தில் இருக்கும் ஆளப்போறான் தமிழன் பாடலை ஹரி சரண் பாடியபோது மைதானத்தில் கூடியிருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் வைபாகி அவருடன் சேர்ந்து பாட; புக்கீக் ஜலீல் ஸ்டேடியம் அதிர்ந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











