அந்த பென்குயினே எங்க அண்ணா விஜய் தான்.. வைரல் வீடியோவை வைத்து மீம்ஸ் போட்ட தளபதி ரசிகர்கள்!
சென்னை: உலகளவில் வைரலாகி வரும் அந்த நிஹிலிஸ்ட் பென்குயினே எங்க அண்ணன் தளபதி விஜய் தான் என விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட வைரல் வீடியோக்களை போட ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் அஜித்தை விட கேம்பா குளிர்பானத்துக்கு அஜித் ரசிகர்கள் விளம்பரம் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய் ரசிகர்கள் இந்த பென்குயின் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
ஜாலியாக லியோ 2, அட்லி இயக்கத்தில் ஒரு படம் ஒவ்வொரு படத்துக்கும் 250 கோடி சம்பளம், அதற்கு மேல் 300 கோடி என ஏற்றிக் கொண்டு போகாமல் ஜனநாயகன் ரிலீஸ் பஞ்சாயத்து, திமுக, பாஜக கட்சிகளை எதிர்த்து அரசியல், வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சட்டப் போராட்டம் என விஜய் கடுமையான மலை பாதையை தேர்ந்தெடுத்து அந்த தனித்துவமான பென்குயினாகவே மாறிவிட்டார் என்கின்றனர்.

இயல்பை கடந்து மாற்று திசையில் பயணிக்கும் போது ஏற்படும் இன்னல்களை எதிர்கொண்டு வெற்றி இலக்கை அடைந்தால் மட்டுமே ஒருவரால் தலைவனாக முடியும் என்றும் பில்டப் கொடுத்து வருகின்றனர்.
பென்குயின் கதை என்ன?: நிஹிலிஸ்ட் என்கிற பென்குயின் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து, 70 கி.மீ தொலைவில் உள்ள மலைப் பகுதியை நோக்கி நடந்த விசித்திரமான சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 2007ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தக் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் உலகளவில் வைரலாகப் பரவி வருகிறது.
பென்குயின் வழிதவறிச் சென்றிருக்கலாம் என நினைத்து, அதை மீண்டும் அதன் கூட்டத்துடன் சேர்த்தனர். ஆனால், மலைப் பகுதியை நோக்கியே அதன் பயணம் தொடர்ந்தது. உணவுப் பொருட்களைக் காட்டி திசைதிருப்ப முயன்றபோதும், தனது இலக்கை நோக்கி உறுதியாகப் பயணித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
விஜய் தான் அந்த பென்குயின்: இந்த வைரல் வீடியோவை கண்ட தளபதி ரசிகர்கள் அந்த பென்குயினே எங்க அண்ணன் தளபதி தான் என மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர். ஜாலியாக சினிமா குடும்பத்துடன் இருந்திருந்தால் அவரை அனைத்து அரசியல் தலைவர்களும் அரவணைத்து சென்றிருப்பார்கள். ரெட் ஜெயன்ட், டான் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ் பேனரில் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் படங்களீல் நடித்திருக்கலாம். இதுவரை கைதி, துப்பாக்கி போன்ற படங்களுக்கு எப்படி சென்சார் பிரச்னை வரவில்லையோ அதே போல ஜனநாயகனும் இந்நேரம் பொங்கலுக்கு வெளியாகி கலெக்ஷனை அள்ளியிருக்கும்.
அனைத்து சந்தோஷங்களை விட்டு விட்டு போராட்ட வாழ்க்கையை மக்களுக்காக தேர்ந்தெடுத்த மகத்தான பென்குயின் எங்கள் அண்ணா விஜய் என பல்வேறு மீம்ஸ்கள், வாய்ஸ் ஓவர் எடிட்கள் என சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் ஒருபக்கம் அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











