மத்தவங்களுக்குத்தான் தமிழக வெற்றி கழகம்.. ரசிகர்களுக்கு தளபதி விஜய் கழகம்.. டீகோட் பண்ண ஃபேன்ஸ்!

சென்னை: ஒரு ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வந்தாலே தளபதி படம் என்றால் அப்படி டீகோட் பண்ணும் ரசிகர்கள் கட்சியின் பெயர் வந்த உடனே சும்மாவா இருப்பார்கள். நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப் போகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து தனது கட்சி பெயரையும் அறிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என கட்சி பெயரை அறிவித்த நிலையில், வெற்றிக்கழகம் தானே வரும் என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்க? ஆங்கிலத்தில் TVK என்றும் அப்படின்னா தளபதி விஜய் கழகம் தானே என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

Aim Big என லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய் பேசிய போதே கப் முக்கியம் பிகிலு என பேசியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நடிகர் ரஜினிகாந்த் போல அரசியலுக்கு வருகிறேன் என ஒவ்வொரு முறையும் சொல்லி விட்டு தனது படங்களை ஓட வைத்தது போல விஜய் செய்யவில்லை என்றும் சொல்லி அடிப்பாரு கில்லி என தற்போது #தமிழகவெற்றிகழகம் ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Vijay fans decodes Thamizhaga Vettri Kazhagam as Thalapathy Vijay Kazhagam


சினிமாவில் இருந்து விலகல்: ஆனால், அந்த சந்தோஷமான அறிவிப்புக்கு இடையே நடிகர் விஜய் கடைசியாக அரசியலை விளையாட்டாகவோ பொழுதுபோக்காகவோ பார்க்கவில்லை. எனக்கு இதுநாள் வரை வசூலை வாரிக் குவித்த மக்களுக்கு ஏதாவது இனிமேல் செய்யணும்னு நினைக்கிறேன். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் ஏற்கனவே கமிட்டான இன்னொரு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு முழு நேரமும் மக்கள் பணியாற்ற வந்து விடுவேன் எனக் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் இருந்து மாமன்னன் படத்திற்கு பிறகு விலகியதை போலவே விஜய்யும் சினிமாவில் இருந்து இன்னும் 2 படங்களில் விலகி விடுவேன் என்பதை அறிவித்து இருக்கிறார்.


தளபதி விஜய் கழகம்: தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு நடிகர் விஜய் பெயர் சூட்டியிருக்கும் நிலையில், மத்தவங்களுக்கு வேணா அது தமிழக வெற்றி கழகம் ஆனால், எங்களுக்கு தளபதி விஜய் கழகம் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சினிமாவில் பார்த்தாலும் சரி, நேரடியாக மக்களுக்காக இறங்கி பணி செய்யும் போது உங்களை பார்த்தாலே போதும் தலைவா என தளபதி பெயரை தலைவர் விஜய் என மாற்றி விட்டனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X