தளபதி வாய்ஸ்ல ஜாலியான பாடல்... சூப்பர் கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் வெளியீடாக ரிலீஸ் ஆக உள்ளது இந்தப் படத்திற்காக ரசிகர்கள் சூப்பர் உற்சாகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்தின் முதல் பாடல் வெளியாகி தற்போது 19 கோடி வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளது.

தளபதி விஜய்யின் பீஸ்ட்

தளபதி விஜய்யின் பீஸ்ட்

தளபதி விஜயின் படங்கள் என்றாலே ரசிகர்கள் சூப்பர் கொண்டாட்டத்துடன் அதை வரவேற்பார்கள். அவருடைய படங்களுக்கு தனியாக விளம்பரமே தேவைப்படாது. ரசிகர்களே அந்த படத்தை சூட்டிங் முதற்கொண்டு ரிலீஸ் வரை அப்படியே கொண்டு செல்வார்கள். அதை கொண்டாடவும் செய்வார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரலில் கோடை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் அறிவித்த நாள் முதலே படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

தொடர்ந்து அப்டேட்கள்

தொடர்ந்து அப்டேட்கள்

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவ்வப்போது படத்தின் அப்டேட்கள் வெளியாகி வந்தது. விஜய்யின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியானது. தொடர்ந்து படத்தின் நூறாவது நாள் சூட்டிங்கை நிறைவு செய்த படக்குழு படத்தின் சூப்பர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் விஜய் டிரம்ஸ் வாசித்தபடி இருந்தார். அப்போதே ரசிகர்கள் அந்த போஸ்டரை கொண்டாடினர்.

அரபிக்குத்து பாடல்

அரபிக்குத்து பாடல்

தொடர்ந்து படத்தின் சூட்டிங் நிறைவடைந்து டப்பிங் உள்ளிட்ட பணிகளும் முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்தும் தயாரிப்பு தரப்பு அறிவித்துவிட்டது. இதையடுத்து படத்தின் முதல் பாடல் அரபி குத்தும் கடந்த பிப்ரவரி 14 காதலர் தின வெளியீடாக ரிலீஸ் செய்யப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்தப் பாடல் ரசிகர்களின் சிறப்பான ஆதரவைப் பெற்று தொடர்ந்து 19 கோடி வியூஸ்களை எட்டியுள்ளது. ரசிகர்கள் தொடர்ந்து இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர். தற்போது படத்தின் புரமோஷன் பணிகளை துவக்க படக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலுக்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது.

ஜாலி ஓ ஜிம்கானா பாடல்

ஜாலி ஓ ஜிம்கானா பாடல்

இரண்டாவது பாடல் ஜாலி ஓ ஜிம்கானா குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்தப் பாடலின் ப்ரமோவில் மிகவும் உற்சாகமான விஜய்யை காண முடிந்தது. மேலும் பாடலில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்களையும் காணமுடிந்தது.

உற்சாகமான விஜய்

உற்சாகமான விஜய்

இவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த பாடலில் ஆட்டம் போட்டுள்ளனர். எப்போதும் புரமோஷனுக்கு மெனக்கெடும் நெல்சன் இந்த பாடலின் புரமோஷனுக்கு பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. விஜய் வாய்ஸில் வெளியாகியுள்ள இந்தப் பாடலில் அவரது ஸ்டைல் மற்றும் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது

Recommended Video

Vijay Fans Ask For Beast Update From Mohammad Shami | Filmibeat Tamil
சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்


இதுவே இந்த பாடலுக்கான சிறப்பான பிரமோஷன் ஆகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த பாடல் நாளைய தினம் லிரிக் வீடியோவாக வெளியாக உள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தளபதியின் வாய்ஸை கேட்க ரெடியா என்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டுள்ளது. மேலும் பாடலின் ப்ரோமோவையும் வெளியிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X