ஜோதிகா, மும்தாஜ், ஷில்பா ஷெட்டி.. எப்படி இருந்த விஜய்.. தியேட்டரில் குத்தாட்டம்.. குஷி ரீ-ரிலீஸ்!
சென்னை: எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் 2000ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற குஷி திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரீ ரிலீஸ் படங்களின் கோட்டையாக கொண்டாடப்படும் கமலா தியேட்டரில் எல்லாம் ஏகப்பட்ட காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளன.
தளபதி விஜய் நடித்த எந்தவொரு புதிய படமும் இந்த ஆண்டு வெளியாகாத நிலையில், ஏற்கனவே வெளியான சச்சின் ரீ ரிலீஸ் தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்திய நிலையில், அடுத்ததாக தியேட்டர்களில் ரசிகர்களை ஆட வைத்து வருகிறது குஷி ரீ ரிலீஸ்.

ஜோதிகா, மும்தாஜ், ஷில்பா ஷெட்டின்னு இளமை ததும்பும் நடிகைகளுடன் ஆடிப் பாடி ஜாலியாக நடித்த விஜய் இப்போ ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்களை சந்தித்து வருகிறாரே என்றும் ஜாலியான வாழ்க்கைக்கு பதில் மக்களுக்காக இறங்கி வந்திருக்கும் விஜய் வேறலெவல் என ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.
25 ஆண்டுகளுக்கு முன்பே: 2000ம் ஆண்டிலேயே தமிழ் சினிமாவில் குஷி படத்தை இயக்கி எஸ்.ஜே. சூர்யா தான் ஒரு ஓஜி இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார். அப்போதே லிப் லாக் முத்தம், கவர்ச்சி டான்ஸ், ஈகோ கிளாஷ் என ஏகப்பட்ட புதுமையான விஷயங்களை திரையில் கொண்டு வந்து இன்றளவும் ரசிகர்கள் 100 முறைக்கு மேல் பார்த்தாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காத படமாக குஷியை கொடுத்திருப்பார். 25 ஆண்டுகள் கழித்து இன்று ரீ ரிலீஸ் ஆகியுள்ள குஷி திரைப்படம் இந்த வாரம் வெளியாகும் புதிய படங்களை விட அதிகளவில் ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி ஈர்க்கும் என்கின்றனர்.
ஷில்பா ஷெட்டியின் மேக்கோரினா: குஷி படத்தில் பன்ஜி ஜம்பிங் செய்து விஜய் அறிமுகம் காட்சியில் இருந்து ஷில்பா ஷெட்டியுடன் இணைந்து "மேக் மேக் மேக்கோரினா" பாடலுக்கு நடனமாடும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்கள் எழுந்து தியேட்டரில் ஸ்க்ரீன் அருகே ஆட்டம் போட்டு படத்தை கொண்டாடி வரும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
ஜோதிகாவின் மேகம் கருக்குது: விஜய்யை தொடர்ந்து ஜோதிகாவின் அறிமுக பாடல் காட்சியான மேகம் கருக்குது பாடல் காட்சிக்கு ஒட்டுமொத்த பெண் ரசிகைகள் எல்லாம் தியேட்டர்களில் ஆட்டம் போட்டு வருகின்றனர். ஜோதிகாவின் இடுப்பு சீன் இன்றைக்குமே அத்தனை ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த சென்ஸ் இல்லை, மேனர்ஸ் இல்லை என திட்டும் சீனும், ஒவ்வொரு முறையும் விஜய்யிடம் காதல் சொல்ல வர இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ கிளாஷ் என அனைத்து காட்சிகளிலும் ஜோதிகாவின் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். “ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்” பாடலுக்கும் செம ரெஸ்பான்ஸ்.
மும்தாஜின் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல்: மலை மலை மருதமலை, கட்டிப்புடி கட்டிப்புடி டா என ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் கொடுத்த மும்தாஜ் தற்போது அந்த பாடல்களில் எல்லாம் ஏன் நடித்தோம் என வருத்தப்படும் அளவுக்கு மத நம்பிக்கையில் வேறூன்றி சென்றுவிட்டார். ஆனால், தியேட்டர்களில் விஜய்யுடன் இணைந்து அவர் நடனமாடிய "கட்டிப்புடி கட்டிப்புடிடா" பாடலுக்கு வேறலெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ஒவ்வொரு பாடல் வரும்போதும் ரசிகர்கள் ஸ்க்ரீன் அருகே சென்று ஆட்டம் போடும் வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்கு குஷி படம் குறித்து தான் இருக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











