இப்படியே சட்டசபை லைவ் போட்டா.. விஜய் ஃபேன்ஸ் யாருமே படம் பார்க்க போகமாட்டாங்களே!

சென்னை: "வாயை திறந்து பேசுங்க சிஎம்" என முதல் நாள் எதிர்க்கட்சி தரப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் பார்ட்டி ஃபண்ட் என்கிற வார்த்தையை சொன்னதும் அவரை பேச விடாமல் ஒட்டுமொத்தமாக திமுக தரப்பு எழுந்து நின்று கத்தி கூச்சலிட்டு வெளிநடப்பும் செய்த லைவ் காட்சிகளை ஏகப்பட்ட ரசிகர்கள் பார்த்து ஓஹோ சட்டசபை இப்படித்தான் நடக்குமா? என சோஷியல் மீடியாவில் பேசத் தொடங்கியுள்ளனர்.

விஜய் சினிமாவை விட்டுப் போய்விட்டாரே அவருக்கு எவ்வளவு பெரிய லாஸ் என பலரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், இப்போ சினிமாவுக்கே பெரிய லாஸ் ஆக சட்டசபை லைவ் மாறிவிடும் சூழல் உருவாகியுள்ளது என நெட்டிசன்கள் ட்வீட் போட ஆரம்பித்து விட்டனர்.

Vijay fans enjoying Tamil Nadu Assemble live it s a big alert for Theaters

கொளத்தூரில் கொஞ்ச நேரம் பேசியதற்கே மு.க. ஸ்டாலின் தோற்றுவிட்டார் என்றும் பேசி திமுகவினர் மொத்தமாக ட்ரிக்கர் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

வாயை திறந்த விஜய்: வீட்டை விட்டு வெளியே வா விஜய், வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் என கலாய்த்ததன் விளைவு தான் இன்று வீட்டை விட்டு வெளியே வந்து கோட்டைக்குள் முதலமைச்சராகவே விஜய் மாறியுள்ளார். இப்போ வாயை திறங்க சிஎம் என பேசிக் கொண்டிருந்த எதிர்க்கட்சியினர் விஜய் வாயை திறந்த உடனே காதை பொத்திக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டனர் என விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் சட்டசபையில் சிஎம் விஜய் பேசிய காட்சிகளை ஷேர் செய்து ஃபயர் விட்டு வருகின்றனர்.

ஆமாம் எங்களுக்கு எதுவும் தெரியாது: இவங்களுக்கு எதுவுமே தெரியாது, ஆட்சி பண்ண வந்துட்டாங்க என்கிற எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆமாம், எங்களுக்கு ஊழல் பண்ண தெரியாது. மக்களை ஏமாற்றத் தெரியாது, மோசடி பண்ண தெரியாது, கோயில் காசை ஆட்டையைப் போடத் தெரியாது என பேசி மிரட்டிவிட்டார் முதலமைச்சர் விஜய்.

இப்படியே லைவ் போட்டா தியேட்டர்களின் நிலைமை?: சட்டசபையில் நடைபெறும் நிகழ்வுகளை இருட்டடிப்பு செஞ்சுட்டாங்க என எதிர்க்கட்சியினர் சொல்லிய நிலையில், லைவ் போட ஆரம்பித்துள்ளனர். இப்படியே லைவ் போட்டா விஜய் பேசுவதை மட்டுமே அவரது ரசிகர்கள் பார்கக்த் தொடங்கி விடுவார்கள் என்றும் ஜன நாயகன் படத்தையே மறந்துவிட்டு ரியல் ஜனநாயகனை கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகின்றனர். சினிமா, சீரியல், ஓடிடியை எல்லாம் மறந்துவிட்டு செய்திச் சேனல்கள் முன்பாக லைவ் பார்க்க ரசிகர்கள் தொடங்கியிருப்பது திரைத்துறைக்குத் தான் ஆபத்து என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X