தளபதி 66ஐ தள்ளி வைத்த விஜய் ரசிகர்கள்.. லோகேஷ் கனகராஜின் தளபதி 67 அறிவிப்புக்கு பிறகு நடந்த மாற்றம்?
சென்னை: தளபதி 67 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவது உறுதியாகி உள்ள நிலையில், தளபதி 66 படத்தையே கண்டுக்காமல் விடத் தொடங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள்.
பீஸ்ட் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறாத நிலையில், தளபதி 66 படத்தின் மீது விஜய் ரசிகர்கள் பெரிய ஈடுபாடே இல்லாமல் தான் இருந்து வந்தனர்.
ஆனால், சமீபத்தில் வந்த விக்ரம் படத்தின் டிரைலர் பார்த்த பின்னர், தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்பது தெரிந்ததும் அடுத்த சம்பவம் லோடிங் என கொண்டாடி வருகின்றனர்.

ஹைப் வைக்கல
பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் மீது விஜய் ரசிகர்கள் எந்தவொரு ஹைப்பையும் வைக்காமல் உள்ளனர். படம் நல்லா வரும் என்கிற நம்பிக்கையுடன் அமைதியாக அடக்கி வாசித்து வருகின்றனர். சமீபத்தில் பீஸ்ட் படத்தை சர்வதேச அளவில் ட்ரோல் செய்தது அவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.

ஃபேன் ஃபைட்
சமூக வலைதளத்தில் முன் எப்போதையும் விட ரசிகர்களின் சண்டை உச்சம் பெற்றுள்ளது. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களை மார்ப்பிங் செய்து ட்ரோல் வீடியோ போட்டது மட்டுமின்றி அவர்களின் குழந்தைகளையும் தற்போது ரொம்பவே இழிவாக பேசத் தொடங்கி உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை அவர்களது ரசிகர்கள் என்கிற போர்வையில் இருக்கும் சில விஷமிகளே காலி செய்து விடுவார்கள் என கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

கன்ஃபார்ம் பண்ண லோகேஷ்
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 அப்டேட் சீக்கிரம் வரும் எனக் கூறியதுமே ஒட்டுமொத்த அரங்கமே அதிர்ந்தது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் உடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் பணியாற்ற உள்ள அறிவிப்பு வெளியானதுமே விஜய் ரசிகர்கள் கெத்துக் காட்ட தொடங்கி உள்ளனர்.

பெரியப்பா சம்பவம் லோடிங்
சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா என ஒவ்வொரு முன்னணி நடிகரின் ஸ்க்ரீன் ஸ்பேஸை பார்த்து மிரண்டு போயுள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்தால் பெரியப்பா சம்பவம் லோடிங் என கேஜிஎஃப் 2 ஸ்டைலில் ட்வீட்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

தளபதி 66ஐ கண்டுக்கல
தளபதி 66 படம் எப்படியும் குடும்ப சென்டிமென்ட் படமாகத்தான் இருக்கும் என்றும் தளபதி 67 படம் செம மாஸான கேங்ஸ்டர் கதையாக உருவாகும் என்கிற ஹைப் காரணமாக இதை விடுத்து தளபதி 67 பக்கம் மொத்த கவனத்தையும் விஜய் ரசிகர்கள் திருப்பி உள்ளனர் என ஏகப்பட்ட மீம்களும் டிரெண்டாகி வருகின்றன.

யுவன் காம்போ
மாஸ்டர், விக்ரம் என அனிருத் காம்போவில் படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யுவன் சங்கர் ராஜா காம்போவில் தளபதி 67 படத்தை இயக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய சீக்கிரமே விஜய் படம் பண்ணுவேன் என யுவன் சங்கர் ராஜாவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











