கில்லி அளவுக்கு ’கோட்’ வந்தா நான் பினிஷ்.. வெங்கட் பிரபுவுக்கு ரசிகர்களின் ஒரே கோரிக்கை இதுதான்!

சென்னை: கில்லி படத்தில் தரணி நடிகர் விஜய்யை பயன்படுத்திய அளவுக்கு வேறு எந்த இயக்குநர்களும் விஜய்யை பயன்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. துப்பாக்கி படம் போல ஸ்டைலாக காட்டினாலும், கில்லி படத்தில் மாஸுக்கு மாஸ், ஆக்‌ஷனுக்கு ஆக்‌ஷன், காமெடிக்கு காமெடி என ஆல் ரவுண்டராக நடிகர் விஜய் பின்னி பெடலெடுத்து இருப்பார்.

திருப்பாச்சி, சிவகாசி படங்களிலும் நடிகர் விஜய்யின் காமெடி டைமிங் வொர்க்கவுட் ஆகியிருக்கும். ஆனாலும், கில்லி சரவண வேல் அளவுக்கு இருந்ததா? என்றால் அதற்கு ஒரே பதில் இல்லை என்றே ரசிகர்கள் சொல்வார்கள்.

Vijay fans expecting GOAT will come masterpiece like Ghilli

மாஸ்டர் படத்தில் குடிகார வாத்தியாராகவும் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களை சீர்த்திருத்தும் மாஸ்டராகவும் நடித்திருப்பார். கடந்த ஆண்டு வெளியான லியோ படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என இரு விதமான தோற்றங்களில் நடித்திருந்தாலும் அனைத்து ரசிகர்களையும் அந்த கதாபாத்திரமும் கில்லி அளவுக்கு திருப்திப்படுத்தியதா? என்றால் அதற்கும் இல்லை என்கிற பதில் தான் வருகிறது.

தெறிக்கவிடும் கில்லி ரீ ரிலீஸ்: இதுவரை இந்த ஆண்டு வெளியான ரீ ரிலீஸ் படங்களில் முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் 4 கோடி ரூபாயும் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து கில்லி படம் ரீ ரிலிஸீலும் சாதனை படைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களும் பெருவாரியாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த படமாக இருந்தது. ஆனால், நடிகர் விஜய்க்கு கில்லி, போக்கிரி உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.

கோட் படமும் எப்படி இருக்கும்?: நடிகர் விஜய் கோட் படத்திற்காக தனது உடல் எடையை ரொம்பவே குறைத்துக் கொண்டு சரியாக சாப்பிடாமல் கூட நடித்து வருகிறார் என்பது அவரை பார்த்தாலே தெரிகிறது. அப்பா விஜய், மகன் விஜய், நடுத்தர வயது தோற்றத்தில் விஜய் என 3 தோற்றத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி என ஏகப்பட்ட பேர் உள்ள இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக மட்டுமே இருக்குமா? அல்லது கில்லி போல காமெடிக்கும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் காட்சிகளுக்கும் ஸ்கோப் இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. வாரிசு படம் எல்லாம் கில்லி போல தரமான காமெடி காட்சிகளுடன் வெளியாகி இருந்தால், ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து இருப்பார்கள். பீஸ்ட் படத்திலும் காமெடி போர்ஷன் ரொம்பவே மிஸ் ஆகிவிட்டது.

ஆக்‌ஷன் மட்டுமே: நடிகர் விஜய்யின் மிகப்பெரிய பலமான காமெடி மற்றும் ரொமான்ஸ் போர்ஷன்கள் முற்றிலுமாக குறைக்கப்பட்டு வெறும் ஆக்‌ஷனை மட்டும் ரத்தம் தெறிக்க தெறிக்க அடிப்பது, சுத்தியலால் பல்லை உடைப்பது, ஒரே ஆளாக 300 பேரை துவம்சம் செய்வது எல்லாம் தியேட்டர் மெட்டீரியலாக இருந்தாலும், 20 வருடங்கள் கழித்தும் கில்லி போல ஒரு படமாக விஜய்யின் கோட் படம் ரிப்பீட் வேல்யூவுடன் இருக்க வேண்டும் என்பது மட்டுமே வெங்கட் பிரபுவிடம் தளபதி ரசிகர்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது. சுமாரான படத்தையும் விஜய் ரசிகர்கள் சூப்பர் ஹிட் ஆக்கி விடுவார்கள். ஆனால், அவர்களுக்கு அன்லிமிடெட் பிரியாணியை வெங்கட் பிரபு பரிமாறுவாரா என்பது வரும் செப்டம்பர் 5ம் தேதி தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X