நீயும் போயிட்டா எப்படிண்ணே.. டிரெண்டாகும் விஜய்.. ஜனநாயகன் ஷூட்டிங் ஓவர்.. ரசிகர்கள் ஃபீலிங்!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் கடைசி படமாக ஜன நாயகன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள விஜய் இன்று முதல் முழு நேர அரசியல்வாதியாக மாறுவார் எனக் கூறுகின்றனர். எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வந்த ஜன நாயகன் படத்தில் விஜய்யின் போர்ஷன் முழுமையாக நிறைவு அடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தொகுதி வாரியாக தேர்வு செய்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார். வைரக் கம்மல் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி வருகிறார்.

Vijay fans feeling sad after knowing Thalapathy completes Jana Nayagan last day shoot

நடிகர் விஜய்யை இனிமேல் பார்க்க முடியாதே என தளபதி ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திருப்பாச்சி பட சீன்களையும் மற்ற படங்களின் எடிட்டுகளையும் வெளியிட்டு #ThalapathyVijay ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர்.

விஜய்யின் கடைசி நாள் ஷூட்டிங் ஓவர்: கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தில் விஜய் நடித்து வந்த காட்சிகள் முழுவதுமாக படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடைசி நாள் ஷூட்டிங்கை கொண்டாட நினைத்த படக்குழுவுக்கும் அதெல்லாம் வேண்டாம் என விஜய் தடை விதித்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. சிறு வயதிலிருந்தே சினிமா தான் உயிர் என நினைத்து நடித்து வந்த விஜய் உச்ச நடிகராக மாறிய போதிலும், தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து கேமரா முன்பும் லைட்ஸ் முன்பும் நின்றுக் கொண்டு இரவு பகல் பாராமல் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்கிற பெருமையை பெற்றுள்ள விஜய் இதற்கு மேல் நடிக்க மாட்டாரா? என்றும் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களின் விருப்பங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Vijay fans feeling sad after knowing Thalapathy completes Jana Nayagan last day shoot

நீயும் போயிட்டா எப்படிண்ணே: திருப்பாச்சி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகை மல்லிகா "நீயும் போயிட்டா எப்படிண்ணே" என சொன்னதும் "என்ன தவம் செஞ்சிப்புட்டோம்" பாடல் வந்து ரசிகர்களில் கண்ணீர் கடலில் ஆழ்த்தும் அந்த பாடலுடன் விஜய் நடித்த சூப்பர் ஹிட் காட்சிகளை மாஷ் அப் செய்து எடிட்டுகளாக போட்டு ரசிகர்கள் உருகி வருகின்றனர். ஜன நாயகன் படத்தை வேறலெவலில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமே அரசியல் தான்: இதுவரை நடிகர் விஜய்யை சூட்டிங் ஸ்பாட்டுகளிலும், ஆடியோ வெளியீட்டு விழாவிலும், சினிமாவிலும் மட்டுமே பார்த்து வந்த ரசிகர்களும் பொது மக்களும் இனிமேல் தினமும் அவர்களின் ஊர்களிலேயே சந்திக்கும் சூழல் உருவாக உள்ளது. இன்று முதல் முழு நேர அரசியல்வாதியாக விஜய் அனைத்து இடங்களுக்கும் செல்வார் என்றும் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் வெற்றிப் பெற என்னவெல்லாம் யூகம் வகுக்க காத்திருக்கிறார். அவர் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன என்பதை ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X