அவதூறு பேச்சு.. மீரா மிதுன் மீது புகார் கொடுத்த விஜய் மக்கள் இயக்கம்.. நடவடிக்கை பாயுமா?
சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியதாக மீரா மிதுன் மீது விஜய் ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வனிதா விஜயகுமார் பிரச்சனை ஒரு புறம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது மீரா மிதுனின் சர்ச்சை பேச்சுக்கள் பூகம்பத்தை கிளப்பி உள்ளன.
நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை மட்டுமின்றி அவர்களது குடும்பத்தையும் படு கேவலமாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

ரொம்ப அசிங்கமாக
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை மிகவும் தரக்குறைவாகவும் ரொம்ப அசிங்கமாகவும் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார் மீரா மிதுன். இதனால், ஆத்திரமடைந்த தளபதி ரசிகர்கள் மீரா மிதுன் ட்வீட்டுக்கு கீழே அவரை ஆபாசமாக திட்டியும் மிரட்டியும் பல வித கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

கண்டிக்கும் திரையுலகம்
கோலிவுட் மாஃபியாக்கள் விஜய் மற்றும் சூர்யா தான் என்றும், இவர்கள் இருவரும் வாரிசு நடிகர்கள், புதுமுகங்களை வளர விட மாட்டார்கள் என இஷ்டத்துக்கு அவதூறுகளை அடுக்கிக் கொண்டே வீடியோக்களை போட்டு வரும் மீரா மிதுனை கோலிவுட் நடிகைகளும், மனோபாலா, பாரதிராஜா உள்ளிட்ட திரையுலகினரும் கண்டித்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் புகார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், மீரா மிதுன் மீது கோபத்தில் உள்ளனர். நேரடியாக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மீரா மிதுன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.
Recommended Video

சைபர் கிரைம்
மும்பையில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வரும் நடிகை மீரா மிதுன், சமூக வலைதளங்களில் தன்னை ஆபாசமாக பேசியவர்கள் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள், சூர்யா ரசிகர்கள் உள்ளிட்டவர் தன்னை மிரட்டுவதாகவும், மகளிர் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு தன்னை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











