விஜய் கெட்டவார்த்தை பேசுனது தப்பு.. நீ யோக்கியமா? விஜயை திட்டி வசமாக சிக்கிய கஸ்தூரி!
சென்னை: விஜய் கெட்டவார்த்தை பேசுனது தப்பு என்று கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரியை ரசிகர்கள் இணையத்தில் விளாசி வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம்,
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

கடந்த வாரம் வெளியான டிரைலரில் கெட்டவார்த்தை இடம் பெற்று இருந்ததால் அதுகுறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். படம் ரிலீஸாகும் முன்பே படக்குழு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
நடிகை கஸ்தூரி பேட்டி:இந்நிலையில் நடிகை கஸ்தூரி, டிரைலர் சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அதில், தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தைகளையும் கொச்சை வார்த்தைகள் வருவது இது முதன்முறை இல்லை. ஆனால், எங்கோ ஒரு முகம் தெரியாத நடிகர் சொல்லும் வார்த்தைக்கும் பான் இந்திய நடிகர் என இந்தியாவே உற்று நோக்கும் ஒரு நடிகரான விஜய் அவர்களில் வாயில் இருந்து வரும் வார்த்தைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. யாரோ ஒரு முகம் தெரியாதவர் என்னை திட்டுவதற்கும், எனக்கு நன்றாக தெரிந்தவர் என்னை திட்டுவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.
வன்மையாக கண்டிக்கிறேன்: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒரு 'ஏ' சான்றிதழ் பெற்ற படத்தில் அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை சொல்லி இருந்தால் அது ஏ சான்றிதழ் படம் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு இளைஞர்களை காட்டிலும் ஏராளமான குழந்தைகள், பதின்பருவத்து ரசிகர்கள் அதிகம்உள்ளனர். அப்படி இருக்கையில் நம்ம தளபதி சொல்லிட்டாரு என சொல்லி அவர்களும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் என்றால் அது நன்றாக இருக்காது. லியோ படத்தின் ட்ரைலரில் விஜய் பயன்படுத்திய கெட்ட வார்த்தை போலவே நடிகர் அஜித்தும் மங்காத்தா படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்.

இயக்குநருக்கு நம்பிக்கை இல்லையா: லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த கெட்ட வார்த்தை படத்தில் வராது. மேலும், லோகேஷ் கனகராஜ், நான் தான் விஜய் சாரை இந்த வார்த்தையை சொல்ல வைத்தேன் என கூறியிருக்கிறார். இது ஒரு கவன ஈர்ப்புக்காக சொல்லப்பட்டது எனச்சொல்ல முடியாது. ஏன் என்றால், விஜய் படத்துக்கு கெட்ட வார்த்தை சொல்லி தான் மக்களின் கவனம் பெற வேண்டும், ஓப்பனிங் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இந்த காட்சியில் அந்த வார்த்தை பேசினால் மட்டுமே அந்த உக்கிரம் வரும் என சொன்னால் அது இயக்குநரின் தோல்வியாக தான் பார்க்க வேண்டும் என செய்தியாளர்களிடம் நடிகை கஸ்தூரி பேசி இருந்தார்.
வசமாக சிக்கிய கஸ்தூரி: நடிகை கஸ்தூரி பேட்டியை ஷேர் செய்துள்ள மூடர்கூடம் இயக்குனர் நவீன், ட்வீட்டுகு ட்வீட்டு 'திராவிடியா பசங்க' என்று எழுதும் சகோதரி கஸ்தூரி இதை சொல்வதுதான் நகைமுரண் என கழுவி ஊற்றியுள்ளார். மேலும் பல நெட்டிசன்களும், நீங்க கெட்ட வார்த்தையே பேச மாட்டீங்களா..யோக்கியமா? என கேட்டு கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











