லாக்டவுனால் முடங்கிய வாழ்வாதாரம்.. திரையரங்க ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்!
சென்னை: லாக்டவுனால் திரையரங்க ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
Recommended Video

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொழில் துறை முற்றிலும் முடங்கியுள்ளதால் பலதரப்பட்ட மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைப் பிரபலங்களும் தொழில் அதிபர்கள் அரிசி, மளிகை உள்ளிட்டவற்றை வழங்கி உதவி செய்தனர்.

கொரோனா பாதிப்பால் பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு வேலையில்லாமல் தவிக்கும் திரையரங்கு ஊழியர்களின் தற்போதைய வறுமையை போக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

விருத்தாசலத்தில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்கள் அனைவரின் குடும்பத்துக்கும் விருத்தாசலம் தளபதி மக்கள் இயக்கம் சார்பில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி ஆகியவற்றை வழங்கினர்.

மேலும் திரையரங்க ஊழியர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கிய விஜய் ரசிகர்கள் அவர்களுக்கு அறுசுவை உணவுகளுடன் மதிய விருந்தும் வழங்கியுள்ளனர்.



Click it and Unblock the Notifications











