தளபதி விஜய் வந்தால்.. கேரளாவின் முக்கிய மந்திரி ஆக்குவோம்.. அடடே.. சேட்டன்கள் பொங்குறாங்களே
கேரளம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அவரது தமிழக வெற்றிக் கழகம், சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்களில் வெற்றி பெற்று, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இப்படி இருக்கையில் கேரளாவில் தமிழக வெற்றிக் கழகம் வந்தாலும் ஆதரவு கொடுப்போம் என்று கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஆர்வமாக தெரிவித்துள்ளனர்.
அதாவது, விஜய்க்கு இந்தியா முழுவதும் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் உள்ளார்கள். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், இந்தியர்கள் என இல்லாமல் வெளிநாட்டு மக்களும் விஜய் படத்தின் மீது பெரும் ஆர்வம் காட்டியதை பல தருணங்களில் பார்த்துள்ளோம்.

இப்படி இருக்கையில் விஜய்க்கு தமிழ் நாட்டைக் கடந்து அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ள மாநிலம் என்றால் அது கேரளம் தான். அதுவும் விஜய்யை தங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற எண்ணத்தில் கேரளம் ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி வருகிறார்கள். மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான மோகன் லால், மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் படங்களுக்கு எப்படி மாஸ் ஓபனிங் கொடுக்கப்படுகிறதோ, அதேபோல் இன்னும் சொல்லப்போனால் அதை விட கூடுதலாகவே ஓபனிங் பெறும் படங்கள் என்றால் அது விஜய்யின் படங்கள் தான். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தை பார்க்க பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கேரளம் விஜய் ரசிகர்கள்: தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகள் என்பது அனுமதிக்கப்படுவது இல்லை, அப்படி இருக்கும்போது, கேரளம் எல்லையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரளத்திற்குச் சென்று படத்தை அதிகாலையிலேயே படத்தைப் பார்த்து விடுகிறார்கள். இப்படி இருக்கையில் விஜய் படங்களுக்கு என்று தனி வரவேற்பு எப்போதும் உள்ளது.

முக்கிய மந்திரி விஜய்: இப்படி இருக்கையில், கேரளத்தில் உள்ள விஜய் ரசிகர்கள் பலரும், தமிழ்நாட்டில் எப்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கி ஆட்சியைக் கைப்பற்ற அவரது ரசிகர்கள் பெருமளவுக்கு ஆதரவு தெரிவித்தார்களோ, அதேபோல் கேரளம் மாநிலத்திலும் விஜய் தனது கட்சியை விரிவுபடுத்தினால், அவருக்கு கட்டாயம் ஆதரவு கொடுப்போம் என்றும் கேரளத்தின் முக்கிய மந்திரி ( அதாவது முதலமைச்சர்) ஆக்குவோம் என்றும் விஜய் ரசிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை கேரள விஜய் ரசிகர்கள் கிளப் என்ற எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அவை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த தமிழ்நாடு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினர் பலரும், முதல்வர் சார், நம்ம தவெகவின் சேவை கேரளத்திற்கும் தேவை என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications