இன்னும் சில தினங்களில் ரிலீசாகும் பீஸ்ட்... விஜய் ரசிகர்கள் செஞ்ச வேற லெவல் விஷயம்
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்திற்கான பிரமோஷன்களை சன் டிவி சிறப்பான வகையில் செய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் பீஸ்ட் என்ற அளவில் பிரமோஷன்களை முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்களும் தங்களது பங்கிற்கு பல விஷங்களை செய்து வருகின்றனர்.
Recommended Video

நடிகர் விஜய்
நடிகர் விஜய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பிரமோஷன் பணிகளை சிறப்பான வகையில் செய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் பீஸ்ட் திருவிழாவாக காணப்படுகிறது.

யூடியூப் ட்ரெண்டிங்கில் பாடல்கள்
படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி தற்போதுவரை யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அடுத்ததாக வெளியான ட்ரெயிலர், தீம் பாடலும் கோடிக்காணக்கான வியூஸ்களை பெற்று சிறப்பான சாதனையை மேற்கொண்டுள்ளது. ரசிகர்களை இவற்றை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ரத்தான இசை வெளியீடு
விஜய் படத்தின் இசை வெளியீடு எப்போதுமே மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அதில் விஜய்யின் பேச்சையும் குட்டி ஸ்டோரியையும் கேட்பதற்காகவே ரசிகர்கள் காத்திருப்பார்கள். ஆனால் இந்தப் படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், விஜய்யின் பேட்டி சன் டிவியில் நேற்றைய தினம் ஒளிபரப்பாகியுள்ளது.

விஜய் பேட்டி
10 ஆண்டுகள் கழித்து இந்தப் பேட்டியை விஜய் கொடுத்துள்ளது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது. நெல்சன் எடுத்த இந்தப் பேட்டியில் தனது சொந்த வாழ்க்கை, மகன், அரசியல் மற்றும் சினிமா கேரியர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விஜய் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்த பேட்டி பீஸ்ட் படத்திற்கான சிறப்பான பிரமோஷனாக அமைந்துள்ளது. தொடர்ந்து சன் டிவியும் பல பிரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரசிகர்களும் ஒரு பக்கம் பீஸ்ட் திருவிழாவை கொண்டாடும் வகையில் பல விஷயங்களை செய்து வருகின்றனர். இந்த திருவிழாவிற்கு பந்தக்கால் நடும் விஷயத்தையும் செய்து அசத்தினர்.

நடுக்கடலில் விஜய் பேனர்கள்
நேற்றைய தினம் புதுச்சேரியில் வைக்கப்பட்ட பீஸ்ட் படத்திற்கான விஜய் கட்அவுட்களை அதிகாரிகள் அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் விஜய் படத்தின் கட்அவுட்களை நடுக்கடலில் விஜய் ரசிகர்கள் வைத்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்கள் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த பரபரப்பு
இதன் வீடியோவை சன் நியூஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நேற்று விஜய் அளித்துள்ள பேட்டியில் தளபதியில் இருந்து தான் தலைவனாக மாறுவது ரசிகர்கள் கையில்தான் உள்ளது என்று சூசகமாக பதிலளித்துள்ளார். இந்நிலையில், விஜய் ரசிகர்கள், தாறுமாறாக கட்அவுட் உள்ளிட்டவற்றை வைத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











