twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேனருக்கு பதில் சிசிடிவி கேமரா.. அசத்திய விஜய் ரசிகர்கள்.. குவியும் பாராட்டுகள்!

    |

    Recommended Video

    Bigil Vijay fans : அந்தரத்தில் தொங்கும் விஜய் ரசிகர்கள்-வீடியோ

    நெல்லை: பேனர் வைப்பதற்கு பதிலாக ஒரு பள்ளிக்கு சிசிடிவி கேமராக்களை அன்பளிப்பாக கொடுத்து அசத்தி இருக்கிறார்கள் நடிகர் விஜய்யின் ரசிகர்கள்.

    நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் நாளை மறுதினம் ரிலீசாகிறது. இதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். பல இடங்களில் பிகில் வெற்றியடைய வேண்டி பிராத்தனைகள் நடைபெற்று வருகிறது.

    Vijay fans installed CCTV instead of keeping banners

    இந்நிலையில் நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், பேனர் வைப்பதற்கு பதிலாக மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை வழங்கியுள்ளனர். காவல்துறையின் ஆலோசனை பெற்று அவர்கள் இதனை செய்துள்ளனர்.

    விஜய் ரசிகர்களின் இந்த செயலை நெல்லை காவல்துறை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பாராட்டியுள்ளார். "பெண்கள் பாதுகாப்பிற்காக சிசிடிவி அமைத்து கொடுத்த விஜய் நற்பணி இயக்கத்திற்கு நன்றி. நெல்லை விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சுபஸ்ரீ கடந்த மாதம் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது பேனர் விழுந்து, விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் நடந்த மறுதினமே தனது விழாக்களுக்கோ, படங்களுக்கோ பேனர் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு விஜய் அறிவித்தினார். மேலும் பிகில் இசை வெளியீட்டு விழாவிலும் இதுபற்றி அவர் பேசினார்.

    நடிகர் சூர்யாவும் அதுபோலவே அறித்தார். காப்பான் பட ரிலீஸ் சமயத்தில் அவரது ரசிகர்கள் பேனர் வைப்பதற்கு பதிலாக, ஹெல்மெட் வழங்குவது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபட்டனர். அதுபோலவே விஜய் ரசிகர்களும் செய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The Vijay fans from Tirunelveli installed 12 CCTV cameras and monitors in four different places including a girls higher secendory schoo instead of keeping banners.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X