»   »  போஸ்டர் போர்: சும்மா இருந்த ரஜினி ரசிகர்களை உசுப்பிவிட்ட விஜய் ரசிகர்கள்

போஸ்டர் போர்: சும்மா இருந்த ரஜினி ரசிகர்களை உசுப்பிவிட்ட விஜய் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: விஜய் ரசிகர்களை கண்டித்து திருச்சியில் திரும்பும் பக்கம் எல்லாம் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது விஜய் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். இருவரும் அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர். இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் ரஜினி ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

ரஜினியை அரசியலுக்கு இழுக்க பெருமுயற்சி நடந்து வருகிறது.

போஸ்டர்

போஸ்டர்

கர்நாடகா காரன் கதறனும், ஆந்திரா காரன் அலறனும், தமிழன் தான்டா ஆளனும் என விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து மதுரையில் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில் அவர்கள் மறைமுகமாக அஜீத், ரஜினியை குறிப்பிட்டுள்ளனர்.

 கோபம்

கோபம்

போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்கள் மீது கடும் கோபம் அடைந்துள்ளனர். அதெப்படி எங்கள் தலைவரை பற்றி இப்படி போஸ்டர் அடிக்கலாம் என கொந்தளித்துவிட்டனர்.

கண்டனம்

கண்டனம்

விஜய் ரசிகர்களை கண்டித்து ரஜினி ரசிகர்கள் பதிலுக்கு போஸ்டர் அடித்துள்ளனர். திருச்சியில் திரும்பும் பக்கம் எல்லாம் விஜய் ரசிகர்களை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை பார்க்க முடிகிறது.

 விஜய்

விஜய்

விஜய்க்கு அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது. ஆனால் அவர் அவசரப்படாமல் நிதானமாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரின் ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடித்துள்ளனர்.

English summary
Rajinikanth fans have displayed posters condemning Vijay fans after they insulted their thalaivar by a poster.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil