தளபதி 66ல் மகேஷ் பாபுவை போடறது இருக்கட்டும்.. முதல்ல பாதுகாப்பை போடுங்க.. கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் படம் தளபதி 66.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து படத்தின் புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவை லீக்காகி வருகின்றன.

 தளபதி 66 படம்

தளபதி 66 படம்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் தளபதி 66. இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக ஐதராபாத்தில் சூட்டிங் நடத்தப்பட்டது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். படத்தின் சூட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படம் பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகி வருவதாக தயாரிப்பாளர் தில் ராஜூ முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும்

விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும்

ஆனாலும் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் காமெடி, ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அதிகமாக இருக்கும் என்றும் தில் ராஜூ தெரிவித்திருந்தார். முன்னதாக பீஸ்ட் படம் அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியான நிலையில், இந்தப் படத்தில் காமெடி, சென்டிமெண்ட் என மாறுபட்டு நடிக்கவுள்ளார் விஜய்.

ஏராளமான நட்சத்திரங்கள்

ஏராளமான நட்சத்திரங்கள்

படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம் என அதிகமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் விஜய்யின் ரசிகையான ராஷ்மிகா மந்தனா அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

லீக்கான புகைப்படங்கள், வீடியோ

லீக்கான புகைப்படங்கள், வீடியோ

இந்நிலையில் இந்தப் படத்தின் வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவை கடந்த சில தினங்களாக இணையதளத்தில் லீக்காகி வருகின்றன. இதனால் படக்குழு மிகுந்த அப்செட்டில் உள்ளனர். பாதுகாப்பு வழிமுறைகளையும் மீறி இவை வெளியாவதை தடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

முன்னதாக அழகான செடிகளுக்கு இடையில் நடிகர் விஜய் மற்றும் மற்ற நடிகர்கள் நிற்பது போன்ற புகைப்படம் வெளியானது. இதே சூழலில் மற்றொரு புகைப்படமும் வெளியான நிலையில் தற்போது விஜய் சூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியே சென்று காரில் ஏறுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மீம்ஸ்கள் வெளியீடு

மீம்ஸ்கள் வெளியீடு


மேலும் மீம்ஸ்களாலும் தாக்கி வருகின்றனர். படத்தில் மகேஷ் பாபுவை கேமியோ ரோலில் போடுவதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், மகேஷ் பாபுவை பிறகு போடலாம், முதலில் படத்தின் காட்சிகள் வெளியாவதை தடுக்க பாதுகாப்பை போடுங்கப்பா என்பது போன்ற மீம்ஸ்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.

விஜய் ரசிகர்கள் கோரிக்கை

விஜய் ரசிகர்கள் கோரிக்கை

படம் குறித்த எதிர்பார்ப்புடன் படத்தை பார்க்கும்போதுதான் அது உற்சாகத்தை கொடுக்கும். அதிலும் விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படத்தை புதிதாக பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புவார்கள். ஆனால் இதுபோன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவதை விஜய் ரசிகர்களே விரும்புவதில்லை என்பதையே இந்த மீம்ஸ்கள் வெளிப்படுத்துகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X