வாட்ஸ்அப் ஹேங்காக.. பேஸ்புக் அலற.. டிவிட்டர் சிதற.. இன்ஸ்டா பதற.. யூட்யூப் கதற! #BigilTrailerDay
சென்னை: பிகில் ட்ரெயிலர் இன்று மாலை வெளியாவதை முன்னிட்டு பிகில் ட்ரெயிலர் டே என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரென்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை நயன்தாரா நடித்திருக்கும் படம் பிகில். இந்தப்படத்தின் இசை வெளியிட்டு விழா அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மாலை படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ட்ரென்டிங்
இதனை முன்னிட்டு #BigilTrailerDay, #BigilTrailerFromToday உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை உருவாக்கி இந்திய அளவில் ட்ரென்ட் செய்து வருகின்றனர் விஜயின் ரசிகர்கள். அவற்றில் சில,
பேஸ்புக் அலற..
வாட்ஸ்அப் ஹேங் ஆக.. பேஸ்புக் அலற.. டிவிட்டர் சிதற.. இன்ஸ்டாகிராம் பதற.. யூட்யூப் கதற.. அல்லு சில்லு சேதரனும்..
மெர்சல் அரசன் வாரான் பிகில் ட்ரைலர்
என்றும் தளபதியின் வழியில் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ரசிகர்கள் அட்டகாசம்
6 மணிக்கு இருக்கு.. தளபதி ரசிகர்கள் அட்டகாசம்.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
கடுப்பு கடுப்பா வருது
அய்யோ பெருமாளே நேரம் வேற போய்த் தொலைய மாட்டேங்குது கடுப்பு கடுப்பா வருது பெருமாளே என்று கூறுகிறார் இந்த ரசிகர்
டிரைலர் கொண்டாட்டம்
தளபதியின் சொந்தங்களே!!! பிகில் டிரைலர் கொண்டாட்டம்...
இன்று மாலை 6 மணிக்கு ராம் சினிமாஸ் வளாகத்தில்...
மிரட்டலாமா.. என்று கேட்கிறார் இவர்.
புள்ளிங்கோ வேறலெவல்
புள்ளிங்கோ வேற லெவல் பண்றானுவோ.. வர்றது தலைவரு.. என்கிறார் இவர்.
வெய்ட்டிங்
மரண வெய்ட்டிங் தலைவர் பட ட்ரெயிலருக்காக என்று கூறுகிறார் இவர்.
தகர்க்கப்படும் நாள்
சாதனைகள் தகர்க்கப்படும் நாள் என்று கூறுகிறார் இவர்.
திருவிழா கோலம்
இன்னைக்கே தியேட்டர் எல்லாம் சும்மா திருவிழா கோலம் தான் என்று கூறுகிறார் இந்த ரசிகர்


Click it and Unblock the Notifications











