அஜித் பிறந்தநாள்.. நெகட்டிவ் டேக் போடாத விஜய் ரசிகர்கள்.. அஜித் ரசிகர்கள் என்ன பண்ண போறாங்க?

சென்னை: விஜய் பிறந்தநாளில் படு மோசமான ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்த நிலையில், அஜித் பிறந்தநாளில் எந்தவொரு நெகட்டிவ் ஹாஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் போடாமல் இருப்பதே பலரது பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

பதிலுக்கு, பல விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு வாழ்த்து சொல்லி வந்தனர். மேலும், அஜித் மற்றும் விஜய் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அஜித் மகளோடு விஜய் கொஞ்சி விளையாடும் த்ரோபேக் வீடியோ உள்ளிட்ட பலவற்றை ஷேர் செய்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களின் இந்த செயலால் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் ஏகே63

டிரெண்டிங்கில் ஏகே63

நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு காலை முதலே அஜித் பிறந்தநாள் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வந்தன. அதன் பின்னர், #AK63 ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கிய தியாகாராஜா குமாரராஜா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கப் போவதாகவும் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

 நெகட்டிவ் டேக் இல்லை

நெகட்டிவ் டேக் இல்லை

அஜித் பிறந்தநாளில் அஜித் ஹாஷ்டேக் டிரெண்டான உடனே விஜய் ரசிகர்கள் நெகட்டிவ் டேக்குகளை டிரெண்ட் செய்வார்கள் என எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்படி இந்த முறை விஜய் ரசிகர்கள் எந்தவொரு நெகட்டிவ் ஹாஷ்டேக்குகளையும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்யவில்லை.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து

மாறாக, விஜய் ரசிகர்கள் பலரும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டுள்ளனர். மேலும், நடிகர் அஜித் மற்றும் விஜய் இணைந்திருக்கும் த்ரோபேக் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், இருவரும் இணைந்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் என்ன பண்ண போறாங்க

அஜித் ரசிகர்கள் என்ன பண்ண போறாங்க

விஜய் ரசிகர்கள் இப்படி நடந்தது கொண்டதற்கு பின்னணியில் நடிகர் விஜய் தரப்பில் இருந்து வந்த அட்வைஸ் தான் காரணம் என பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதே போல நடிகர் விஜய்யின் பிறந்தநாள் அன்று அஜித் ரசிகர்களும் இதே போல நெகட்டிவ் டேக்குகளை போட்டு ட்விட்டர் சண்டையை போடாமல் இருப்பார்களா? என்கிற கேள்வியை சில விஜய் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.

Recommended Video

Ajith Birthday-க்கு பிரபலங்கள் வாழ்த்து | Ajith 51'st Birthday | Filmibeat Tamil
டிஆர்பி சண்டை

டிஆர்பி சண்டை

ஒரு பக்கம் வலிமை படத்தை அஜித் ரசிகர்களும், மறுபக்கம் மாஸ்டர் படத்தை விஜய் ரசிகர்களும் இன்னொரு பக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச்சையும் சில ரசிகர்கள் இந்த மூன்றையும் மாற்றி மாற்றி பார்த்து வருகின்றனர். விரைவில் டிஆர்பி ரேட்டிங் அறிவிப்பு வெளியானால் மாஸ்டர் அதிக டிஆர்பி பெற்றதா? வலிமை அதிக டிஆர்பி பெற்றதா? என அடுத்த சண்டையை ஆரம்பித்து விடுவார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X